சென்னை, ஜூன் 30–-
சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–-
கடந்த ஆண்டு நான் எழுதியிருந்த கடிதத்தில் கோரியபடி, எங்கள் கவலைகளுக்கு செவிமடுத்து, பாக்கெட் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி. இது தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கை ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.