நல்வாழ்வு சிந்தனைகள்
சால்மன் மீன்கள் எனும் கிழங்கான் மீன் சாப்பிடுவதால் முடி, நமது தோல் , மூட்டுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதில் வைட்டமின்கள் , தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா – 3 ஆகியவை நிறைந்துள்ளதால் இதை உண்பவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இந்த காரணங்களுக்காகவே நிறைய பேர் இதனை மாத்திரையாக, மருந்தாக மற்றும் உறைந்த நிலையில் உட்கொள்ளுகிறார்கள். சால்மன் மீன்களில் அதிக எண்ணெய் இருக்கும். எனவே அதனை சுட்டு, கிரில் அல்லது அதிக அழுத்த வதக்கல் செய்து, நீராவியில் வேகவைத்து அல்லது கொதிநீரில் கொதிக்க வைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் சால்மன் மாத்திரை, எண்ணெய் போன்ற வடிவங்களிலும் கிடைப்பதால் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்று அதனை உட்கொள்ளவும்.
சால்மன் மீன்களில் நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால் சுகாதார நிபுணர்கள் , மருத்துவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மக்களுக்கு இதனை உட்கொள்ள அரிவுறித்தி வருகின்றனர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அந்த மீன்களில் இயற்கையிலேயே இருப்பவை மற்றும் அவையே அதை ஆரோக்கியமான உணவாக மாற்றுகிறது. அவை மூட்டுகள் மற்றும் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது . இதய நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கிறது. மேலும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நிறைய ஆய்வு முடிவுகளின் படி , கிழங்கன் மீன் உட்கொள்ளுவதால் இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
இவற்றை சமைத்து சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் , அதிக கொழுப்பு , நீரிழிவு நோய் , மூட்டு வீக்கம் , மன அழுத்தம் , மூளை கோளாறுகள், தோல் கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. சால்மன் மீன்களில் எண்ணெய் இருப்பதால் ஒமேகா 3 இயற்கையாகவே அதில் இருக்கும். அது மட்டுமல்ல விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை ஒமேகா 3 நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய் மற்றும் மன அழுத்தம் வருவதற்கான சாத்தியக் கூறுகளை குறைக்கிறது.
எவ்வளவு சப்ளிமண்ட் எடுக்கலாம்?
புரதம்
சால்மன் மீன்களில் நமது வளர்ச்சிக்கு உதவும் மற்றும் தசை திசு நிறையை பராமரிக்க உதவும் அமினோ அமிலங்கள் உள்ளன. சால்மனில் உள்ள புரதம் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் (metabolism) நடைபெற உதவுகிறது. அது உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. 100 கிராம் சால்மனில் 22-23 கிராம் அளவுக்கு புரதம் இருக்கின்றது.
புரதம் : நமது உடலின் கட்டமைப்பிற்கு பெரிதும் உதவுகிறது . எனவே அதனை இயற்கையாக கிடைக்கும் உணவுகளின் மூலம் பெற முயற்சிக்க வேண்டும். நிறைய ஆய்வுகள் சால்மனில் சிறு சிறு பயோ ஆக்டிவ் புரோடீன் முலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்கின்றன.அவை மூட்டிலுள்ள குறுத்தெலும்புகளுக்கு , இன்சுலின் செயல்திறனுக்கு மற்றும் செரிமான தடத்தில் வீக்கம் ஏற்படாமல் கட்டுப்படுத்துவதற்கு போன்றவைக்கு சிறப்பு துணை புரிகின்றன.வைட்டமின்கள்
நாம் ஆரோக்கியமான துடிப்பான வாழ்க்கை முறையை வாழ சால்மன் மீன்களை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி5 ஆகியவை மிகவும் பயன் தரும் அளவில் இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் நமது உடலில் நடைபெறும் முக்கிய செயல்முறைகள் பலவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த செயல்திறன்கள் யாதெனில் நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுவது , இனக்கீற்று அமில மரபணுக்களை உருவாக்க மற்றும் (DNA genes) அதில் ஏற்படும் பழுதை சரி செய்வது மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தக்கூடிய வீக்கங்களை குறைப்பது என இவையே ஆகும். சமீபத்திய ஆராய்ச்சியை பொறுத்தவரை மூளை மற்றும் நரம்பு மண்டலம் தனது பணியை சிறப்பாக புரிய எல்லா வகையான வைட்டமின்களும் தேவை என்கிறது.
சால்மன் மீன்களில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. இவை எழும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. மேலும் தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis) மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் அதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கிறது.சால்மனில் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
பண்ணையில் வளர்க்கப்படாத சால்மன் மீன்களில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது. பழங்களை பொறுத்தவரை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது. ஆனால் சால்மன் மீன்களில் வாழைப்பழத்தில் உள்ள அளவை விட 10% கூடுதலாக பொட்டாசியம் இருக்கிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதுவும் இந்தியா போன்ற நாட்டில் உணவில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் . ஏனெனில் நமது உடலில் உபரி நீர் சேராமல் பொட்டாசியம் தடுக்கிறது.
பாஸ்பரஸும் பல நன்மைகளை புரிகிறது. எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்க, இதயம் மற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்க இவை துணை புரிகிறது.
சால்மனில் உள்ள மற்றொரு தாது செலினியம் ஆகும். அது இதய நோய்கள், தைராய்டு நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுத்து உதவுகிறது.