செய்திகள்

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி

Makkal Kural Official

விருத்தாசலம், ஆக. 20–

விருத்தாசலம் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய 6 இளைஞர்களும் காரில் வேப்பூர் நோக்கி சென்றுள்ளனர். கார் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணித்த எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன்(19), ஆதினேஷ்(22), வேலூர்(19) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த மூன்று பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *