சென்னை, பிப். 4–
சென்னை ராமாபுரத்தில் சாலையில் ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரத்தில் பிரபல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள சிக்னல் அருகே சாலையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், 30 தோட்டாக்களும் கிடந்துள்ளது. இதை கண்ட சிவராஜ் என்பவர் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளார். போலீசார் உடனடியாக அதன் உண்மை தன்மை குறித்து அறிய ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
மருத்துவமனை அருகே துப்பாக்கி மற்றும் குண்டுகளை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த துப்பக்கி மற்றும் தோட்டாக்கள் உண்மையாவையா அல்லது சினிமா படபிடிப்புக்காக கொண்டு செல்லும் போது தவறவிடப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சாலையில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராமாபுரம் பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கி சாலையில் கிடந்து அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.