சென்னை, ஆக 30–
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 30ஆம் வருட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா, 27ஆம் ஆண்டு மேலாண்மை துறை தொடக்க விழா, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் மற்றும் மேலாண்மை துறையின் 17வது ஆண்டு தொடக்க விழா 3 விழாக்களும் நடைபெற்றது.
இவ்விழாவில் 2,700 முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களும், 5,800 பெற்றோர்களும் கலந்து கொண்டனர். சாய்ராம் கல்வி நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 மாணவர்களுக்கு (4 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம்) ரூ.5 கோடி மதிப்பிலான உதவித் தொகை லியோமுத்து அறக்கட்டளை சார்பாக – மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவினை சாய்ராம் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, அறங்காவலர் ரேவதி சாய்பிரகாஷ் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
இக்கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, சிறப்பு விருந்தினர் டெக்டான் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மணன் பேசுகையில், உலகத்தில் ரத்த சம்மந்தம் இல்லாமல் சந்தோஷபடுவது ஆசிரியர்கள் மட்டுமே. என்னுடைய நிறுவன மேம்பாட்டுக்காக 85 நாடுகள் சுற்றி வந்துள்ளனர். மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்தவர்களின் புத்தகங்களை படிக்க வேண்டும். உங்களுக்கு குழப்பம் வரும்போது பதட்டப்படக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். எனவும் வாழ்க்கையில் வெற்றிபெற்றவுடன் கர்வம் கொள்ளக்கூடாது. அப்படி வரும் பட்சத்தில் குறுகிய காலத்தில் அழிவு ஏற்படும். எனவே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்போது பணிவு முக்கியமானது’ என்று கூறியவர், தனது வாழ்க்கையில் படிப்பு முதல் தொழிலதிபராக வரும் வரை இடர்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து முதன்மை உரையில், இன்றைய காலக்கட்டத்தில் போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் என்ன செய்யலாம், மாலையில் என்ன செய்தோம் என எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும் கல்வியில் எந்தப் பிரிவை எடுத்தாலும் விரும்பி எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் 2 வருடம் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் எனவும், அதன் அனுபவங்களை தெரிந்து கொண்டு பின்பு தனியாக ஸ்டார்ட்டப் கம்பெனி வைத்து முன்னேறுவதற்கு உறுதுணையாக அமையும் எனவும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
ஒளிமயமான எதிர்காலம்
இக்கல்லூரியை தேர்ந்தெடுத்தன் மூலம் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இனிமையாகவும், ஒளிமயமாகவும் திகழும் என்றார். இதில் எள்ளவும் ஐயப்படதேவையில்லை. மேலும் இக்கல்லூரி அகில இந்திய அளவில் 101–-150 மற்றும் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி அகில இந்திய அளவில் 150-–200 தரப்பட்டியலில் இடம்பெற்றது. (NIRF) சிறந்தக் கல்வி நிறுவனமாக நடுவண் அரசின், மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு உங்களுக்கு கூறிகொள்ள கடமைப்படுகிறேன் என்றார்.
நாங்கள் எங்களது மாணவர்களை ஒரு பொறுப்புள்ள சமுதாய சிந்தனை சார்ந்த இளைஞர்களாக உருவாக்குகின்றோம். உங்கள் குழந்தைகளையும் நாங்கள் ஒரு சிறந்த சமூகம் சார்ந்த பொறியியல் வல்லுனரை உருவாக்குவதன் மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வோம் என்றார்.
மேலும், இஸ்ரோவின் ரோபோ கண்டுபிடிப்பு சவால் போட்டியில் 2-வது இடத்தைப் பெற்று ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை நமது சேர்மன் சாய் பிராகாஷ் லியோமுத்து வழங்கினார். மாணவ, மாணவிகள் சாய்ராம் கல்லூரியில் அமையப் பெற்றுள்ள பல்வேறு வசதிகளை திறம்பட பயன்படுத்திக்கொண்டு கல்லூரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.
ஆராய்ச்சி மனப்பான்மை
தரமான பொறியியல் கல்வியை நவீன தொழில்நுட்ப வசதியுடனும், மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்க வழிவகை செய்துள்ளோம் என்றார். பொறியியல் கல்வியின் இன்றியமையாமை மற்றும் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். பொறியியல் மாணவர்கள் கல்வி அறிவின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சமூக முன்னேற்றத்திற்கு வித்திட வேண்டும் என்றார்.
நிலைத்த வளர்ச்சி கொள்கையில் சாய்ராம் கல்வி குழுமங்களின் பங்களிப்பு குறித்து விளக்கினார். ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமங்களில் பயிலும் மாணவர்கள் தொழில்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் உயர் படிப்புக்கான வாய்ப்பு மேலும் தொழில் முனைவோராக மாறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது.
அதனால் மாணவர்கள் தங்கள் இலக்கை இன்றே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்கள் இலக்கு சிகரத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றையும், அனுபவங்களையும் சான்றுக் காட்டி கூறினார். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு தாழ்வு மனப்பான்மை, நம்பிக்கையின்மை போன்றவற்றில் இருந்து வெளியில் வரும்போது வெற்றியாளராக முடியும் என்றார். திடமான எண்ணமும், திறமையையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்வதன் மூலம் அரிய சாதனைகளையும், வெற்றியையும் வசப்படுத்திக் கொள்ளலாம்.
விடாமுயற்சி
குறிக்கோள்
சிந்திக்கும் திறன் நம்பிக்கையையும் தரக் கூடிய தரமான கல்வி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் உயர்ந்த இடத்தை அடையலாம் என்றார். விடாமுயற்சி, குறிக்கோள் இவை இரண்டும் ஒருங்கிணைந்து சரியான வழிகாட்டுதல் மூலம் வெற்றி இலக்கை அடைய முடியும் என்றார்.
ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமத்தில் தரமான உட்கட்டமைப்பு, உயர்தர வசதி உடனான ஆய்வகங்கள், தொழிற்பயிற்சி ஏற்ற சூழல் உருவாக்கி தரப்பட்டு சிறந்த கல்வியை வழங்கி மாணவர்களை சர்வதேச அளவில் பெரு நிறுவனங்களில் வேலை புரிவதற்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
உயர்ந்த இலக்கு மற்றும் உயர்வான சிந்தனை மூலம் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மாணவர்கள் தலைமைப் பண்பை வளாத்து கொண்டு தங்களுக்கு வழங்கக் கூடிய வேலைகளை திறம்பட செய்ய வேண்டும் என்றும் அதற்கான சூழ்நிலையை ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி திறம்பட செயல்பட வேண்டும்.
சிஐஓ நரேஷ் ராஜ்
இவ்விழாவில் சிஐஓ நரேஷ் ராஜ் வரவேற்புரை நிகழ்த்தி மாணவர்களையும் பெற்றோர்களையும் வரவேற்றார். மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்து வரவேற்புரையாற்றினார்.
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, முதல்வர்கள் ஜே. ராஜா, முதல்வர் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி கே. பழனிக்குமார் ஆகியோர் விருந்தினர்களை கெளரவப்படுத்தினர். முதலாமாண்டு துறைத் தலைவர் எஸ். இராமகிருஷ்னன் நன்றி கூறினார்.