செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்ரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வு

Makkal Kural Official

இஸ்லாமபாத், மார்ச் 5-

நடைப்பெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வாகி,  9 ந் தேதி துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

அறையிறுதி கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 50 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நியுசிலாந்து அணி தேர்வாகியுள்ளது. லாகூரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிகா அணி 50 ஓவரில் 9 விக்கேட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

நியுசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரட்சின் ரவீந்திரா 108, கேன் வில்லியம்ஸ் 102 ரன்கள் எடுத்தனர்.

#India #Cricket #Newzealand Vs South Africa #Dubai

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *