வாழ்வியல்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ மாடல் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ சாதனத்துடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்து, ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ்,நெதர்லாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 7 லைட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ அம்சங்கள் :–

டிஸ்பிளே: 12.4-இன்ச் எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்பிளே (2560×1600 பிக்சல்கள்) 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் 10 ஆதரவு சிப்செட்: ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதி ரேம்: 4 ஜிபி மெமரி: 64 ஜிபி/128 ரியர் கேமரா: 8 எம்பி செல்பீ கேமரா: 5 எம்பி பேட்டரி: 10,900 எம்ஏஎச் பேட்டரி 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு.

எஸ்-பென் ஆதரவு 5 ஜி, புளூடூத், வைஃபை, யூ.எஸ்.பி-சி போர்ட் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ விலை சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ விலை 64 ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.60,700-ஆக உள்ளது. பின்பு 128 ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.64,800-ஆக உள்ளது.

மேலும் மிஸ்டிக் பிளாக்,மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிங்க் நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *