செய்திகள்

சாமி தரிசனம், அறைகள் முன்பதிவு செய்ய திருப்பதி ஏழுமலையான் கோவில் புதிய செல்போன் ஆப் அறிமுகம்

திருமலை, ஜன. 28–

திருமலை ஏழுமலையான் கோவிலுக்கான தரிசன முன்பதிவு, அங்கு அறைகள் முன்பதிவு மற்றும் நன்கொடைகள் அளிப்பது ஆகிய சேவைகளை உள்ளடக்கிய புதிய மொபைல் செயலியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக TTDevas thanams எனும் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன் செயலி மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் தங்களது மொபைல் செயலி மூலமாகவே தரிசனம், தங்குஅறைகள் ஆர்ஜித சேவை தரிசனம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து TTDevas thanams என்கிற புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது . இதனை நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுபாபா ரெட்டி அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இதுவரை பக்தர்களுக்காக ‘கோவிந்தா’ என்ற செயலி இருந்தது. இது, நவீனப்படுத்தப்பட்டு புதிய சேவைகள் இணைக்கப்பட்டு, புதிய செயலியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பக்தர்கள் அனைத்து தரிசனம் முன்பதிவு தங்குமிடம் முன்பதிவு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் குலுக்கல் முறை தரிசனம், முன்பதிவு தற்போதைய திருமலை நிலவரம் பண்டிகை விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், இ உண்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு என இது ஒரு வழி காட்டிக் போல் செயல்படும். மொத்தத்தில் அனைத்து தகவல்களும் கூடிய ஒரு ஆன்மீக செல்போன் செயலி வெளிவருவது இதுதான் முதல் முறை.

இதில் உள்ள தகவல் குறிப்புகள் வாயிலாக ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் உற்சவ விபரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். அடுத்து, எஸ்.வி.பி.சி., என்ற தேவஸ்தான ‘டிவி’யின் ஒளிபரப்பு களையும் பக்தர்கள் கண்டு தரிசிக்கலாம். இதன் செயல்பாடுகள் குறித்து பக்தர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெற்று, மேலும் மெருகேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *