செய்திகள்

சாமி ஊர்வலத்தில் சிறுமிகளின் கோலாட்டம், ஒயிலாட்டம், இறைவன் வேடமணிந்து கோலாகலம்

மதுரை, ஏப்.15

மதுரை சித்திரை திருவிழாவின் 7 ம் நாளான நேற்று சுவாமிகள் ஊர்வலத்தில் ஏராளமான சிறுமிகள் இறைவன் வேடமணிந்தும் கோலாட்டம், ஓயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி சென்றது பக்தர்களை பரவசமடைய செய்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7 வது நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மன் யாழி வாகனத்திலும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சுவாமிகள் நந்திகேசுவரர் வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமிகள் மாசி வீதிகளில் ஊர்வலத்தின் முன்பு மேள, தாளங்கள், சென்டை மேளம், கொம்பு வாத்தியங்கள் முழங்க சென்றன.

சுவாமிகள் ஊர்வலத்தின் போது இறைவன் வேடமணிந்தும், சிறுமிகள் கோலாட்டம், ஓயிலாட்டம் நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஏராளமான சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், ஓயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை ஆடி சென்றனர். சிறுமிகள் இறைவன் வேடமணிந்து சென்றனர். இதையெல்லாம் 4 மாசி வீதிகளிலும் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *