சினிமா செய்திகள்

சாந்தனு பாக்யராஜ் நடித்து இயக்கிய 7½ நிமிட குறும்படம்!

‘‘கொஞ்சம் கொரோனா… நெறைய காதல்…’’

சாந்தனு பாக்யராஜ் நடித்து இயக்கிய 7½ நிமிட குறும்படம்!

தந்தை வழியில் ஒரு கன்னி முயற்சி

 

சென்னை, மே 18–

பிரபல திரைப்பட நடிகர் – இயக்குனர் – தயாரிப்பாளர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவும், தந்தை வழியிலேயே கதை – திரைக்கதை – வசனம் எழுதி ஒரு குறும் படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். படத்தொகுப்பாளராக கூடுதல் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இது இவரது கன்னி முயற்சி.

‘‘கொஞ்சம் கொரோனா… நெறைய காதல்’’ என்பது அந்தக் குறும்படத்தின் தலைப்பு. கொரோனா உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘கொரோனா’ பின்புலத்தில் ரசிக்கும் விதத்தில் இந்தக் குறும் படத்தை சாந்தனு எடுத்திருக்கிறார். ஏழரை நிமிடம் ஓடும் குறும் படத்தில் அவரும், அவருடைய மனைவி கீர்த்தியும் இணைந்து நடித்திருக்கிறார்கள் திரையிலும்.

தயாரிப்பு நிர்வாகி ஹர்ஷவர்தன், இசையமைப்பாளர் கனேஷ் சேகர், ஒளிப்பதிவாளர் யுவஸ்ரீ, மிக்சிங் இன்ஜினியர் சுப்பையா அனிமேஷன் ராமு பொன்னுசாமி, நடிகர் ஆதவன் கண்ணதாசன், டைரக்டர் திரு, படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர், நிஷாந்த் கிருஷ்ணன், கார்த்திகேயன், வேலப்பன் ஆகியோர் அவரோடு இந்த குறும் படத்தயாரிப்பில் இணைந்திருக்கிறார்கள்.

டாட் சன் பிக்சர்ஸ் பெயரில் நிறுவனத்தை துவக்கி இருக்கிறார் சாந்தனு. ஐபோன் கேமிராவில் முழு குறும்படத்தையும் பிடித்திருக்கிறார். கொரோனா எதிரொலியாக அவரவர்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். தினசரி வாழ்க்கையில் இல்லத்தரசிகள் செய்யும் வீட்டு வேலைகள் எந்த அளவுக்கு மிகவும் சிரமமானது என்பதை சுட்டிக் காட்டியிருக்கும் சாந்தனு வீட்டில் இருக்கும் கணவன் உள்ளிட்டவர்கள் இல்லத்தரசியோடு அவருக்கு உதவியாக செயல்பட்டால் தினசரி வாழ்க்கை எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை சுருக்கமாக காட்டி இருக்கிறார். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் ஒரு சந்தோஷம் என்பதை அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *