செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Makkal Kural Official

சாத்தூர், ஜூன் 29–

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர்.வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்த போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 42), நடுச் சூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (வயது 44), வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் (வயது 48), மோகன் (வயது 50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *