தலையங்கம்
இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது. கேள்வி என்னவென்றால் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான்.
கேள்வி என்னவென்றால், இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான்.
சாதி என்பது இந்திய அரசியலில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை அறிவோம்.
கடந்த மாதம், குஜராத்தில் நடந்த இரண்டு நாள் காங்கிரஸ் மாநாட்டின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையை எழுப்பி, “நாட்டில் எத்தனை தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழை பொதுப் பிரிவினர் உள்ளனர் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளங்களில் அவர்களின் பங்கு என்ன என்பது நமக்குத் தெரியும்” என்று கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தலித்துகள் மற்றும் பழங்குடியினர் சாதிவாரியாக கணக்கிடப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்த பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மீறி, பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுத்துவந்தனர். ஆனால் இப்போது அரசாங்கம் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.” என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதற்கான பெருமையை எதிர்க்கட்சிகளுக்குத்தான் என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் இட ஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம் என்றும் நாங்கள் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம்” என்பதையும் அவர் கட்டிக்காட்டினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்கள் தொகையில் உள்ள பல்வேறு சாதி சமூகங்களின் எண்ணிக்கையைத் தொகுப்பதற்கான ஒரு கணக்கெடுப்பு ஆகும். இது குறிப்பாக சமூக நீதிக்கான திட்டமிடல், நிதி ஒதுக்கீடு மற்றும் அரசு நலத்திட்டங்களை அதிக நேர்த்தியுடன் செயல்படுத்த உதவுகிறது. இது சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள பொது விவரங்களை மட்டுமல்லாமல் சாதியை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தகவல்களையும் சேகரிக்கிறது.
அரசியல் கட்சிகள் தங்களது நலத்திட்டங்களை, பிரசாரங்களை, வேட்பாளர்களை கூட அதனை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட முடியும்.
பின்தங்கிய சமூகங்கள், தனிநபர் அடிப்படையில் குறைவாக ஒதுக்கீடு பெறுகிறோம் என உணரும் சூழ்நிலையைக் கையாள உதவும். இந்திய அரசியல் அமைப்பில் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு என்பது நீதி, சமத்துவம், சமூக மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒரு பாலமாக இருக்கும்.
![]()





