செய்திகள்

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு

Makkal Kural Official

சென்னை, பிப் 5–

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது.

இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சவுதிஅரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (ஆலோசகர், நிபுணர்) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்காண் நேர்காணல் வருகிற 15–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை பெங்களூரில் உள்ள லீலா அரண்மனையில் நடைபெற உள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in – ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (What’s App Number: 6379179200) (044-22505886/044-22502267).

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.omcmanpower.tn.gov.in – ல் நேரிடையாக பதிவு செய்து இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *