செய்திகள் வர்த்தகம்

சவரனுக்கு இன்று ரூ.472 உயர்வு; மீண்டும் ரூ.36 ஆயிரத்தை கடந்தது

சென்னை, ஏப். 21–

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 அதிகரித்து மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை சற்று குறைந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் அதிரடியாக ஏற்றத்தை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் சவரன் ரூ. 35,960 க்கு விற்பனை ஆனது, நேற்று திடீரென சவரனுக்கு ரூ. 384 குறைந்து ரூ.35,576 க்கு விற்பனை ஆனது.

ரூ. 36 ஆயிரத்தை கடந்தது

இந்நிலையில் இன்று திடீரென மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.59 உயர்ந்து ரூ.4,506 க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ரூ.36,048 க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,900 க்கும் விற்பனையாகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து பேரதிர்ச்சியை கொடுத்தது. அச்சமயம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தை எட்டியது.

இதையடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டபோது கணிசமாக குறைந்து வந்த தங்கம் விலை, ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது. தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருவதால், தங்கம் விலை மீண்டும் பழைய படியே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *