வாழ்வியல்

சளி, எலும்புருக்கி நோய் , ஆஸ்துமாவுக்கு மேம்பட்ட மருந்து: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு


அறிவியல் அறிவோம்


சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவு பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பூங்குழலி. இவர் மத்திய அரசு நிதி உதவியுடன் சமீபகாலமாக வேதிப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

தற்போது டாக்டர் பூங்குழலி பென்சோ பி தயோஃபேன் என்ற புதிய வேதிப்பொருளை கண்டுபிடித்து உள்ளார். இந்த புதுமையான வேதிபொருள் சளி எலும்புருக்கி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு தற்போது வழங்கப்படும் மருந்தை விட சிந்ததாக மேம்பட்டதாக உள்ளது. இதை பழைய மருந்துக்கு பதிலாக பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த வேதிப்பொருள் பசுமை முறையிலானது மற்றும் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் ஏற்கனவே மருந்து தயாரிக்கும் பொருளுக்கு மாற்று பொருளாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

இந்த வேதிப்பொருள் மூலம் பக்கவிளைவற்ற, குறைவான விலையில் மருந்துகளை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

சென்னை ஐஐடி பேராசிரியை டாக்டர் பூங்குழலி சாதனை கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். ரசாயன பொருள்களுக்கு பதில் நீரை இந்த ஆராய்ச்சியில் அவர் பயன்படுத்துகிறார். இதற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி அங்கீகரித்துள்ளது.

மருத்துவ அறிவியலில் சாதனைசெய்திருக்கும் தமிழ்ப் பெண்ணான சென்னை ஐஐடி பேராசிரியை டாக்டர் பூங்குழலியின் கண்டுபிடிப்புக்கு தமிழ் மக்களும் நாட்டு மக்களும் பாராட்டுக் கூறி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published.