நல்வாழ்வுச் சிந்தனைகள்
ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா இலை என்று கூறப்படுகிறது.
நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளைநிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
சளி நீக்கி இருமல் தனிப்பானாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும். இலைச் சாரும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்த கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.