செய்திகள்

சர்வாதிகாரம் குறித்து ராகுல் காந்தி பேசுவதா?: ரவிசங்கர் பிரசாத் பதிலடி

டெல்லி, ஆக. 5–

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பி.யுமான ராகுல் காந்தி, இந்தியாவில் 4 பேரின் சர்வாதிகாரம்தான் இருக்கிறது; ஜனநாயகம் மரணித்துவிட்டது என்று அளித்த பேட்டிக்கு பாரதீய ஜனதா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் ராகுல்காந்திக்கு பதிலடியாக அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:–

பொய் சொல்லும் ராகுல்

நாட்டில் பொருளாதரம் பாதிப்பு, பணவீக்கம், ஜிஎஸ்டி , வேலை வாய்ப்பு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய் சொல்கிறார். நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டது என்கிறார். அவரது காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா? அவரது குடும்ப நலனே அவருக்கு முக்கியம்.

குடும்பத்தினரை காப்பாற்ற ராகுல்காந்தி துடிக்கிறார். ஊழலால் காங்கிரஸ் வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கூறுவதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். சர்வாதிகாரம் குறித்து ராகுல்காந்தி பேசுகிறார். முன்னாள் பிரதமரும் அவருடைய பாட்டியுமான இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது ஏன்? இதனை அவர் மறந்து விட்டாரா?.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகிறார். ஆனால், ராகுல்காந்திதான் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வராமல் அஞ்சுகிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.