டெல்லி, ஆக. 21–
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தற்போதைய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்லே இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 30 ந் தேதியுடன் முடிவடைகிறது. ஏற்கனவே 2 முறை ஐ.சி.சியின் தலைவர் பதவியை வகித்த அவர், 3 வது முறையாக தாம் தலைவர் பதவியில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார்.
ஜெய் ஷாவுக்கு வாய்ப்பு?
இதனையடுத்து ஐ.சி.சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27 ந்தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், புதிதாக தேர்ந்தெடுக்கபடுபவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருக்கும் எனவும் அறிவித்திருந்தது. ஐ.சி.சி.-ன் தலைவராக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
அதன்படியே தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையை ஜெய் ஷா பெற உள்ளார். இவரது பதவிக்காலம் டிசம்பர் 1 ந்தேதி ஆரம்பமாகி 3 ஆண்டுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.