நல்வாழ்வுச் சிந்தனைகள்
நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் – இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.
அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நல்லெண்ணெய் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை மலச்சிக்கல்ஓற்படாது.
மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.