வாழ்வியல்

சர்க்கரை நோய் – உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் சரிவிகித உணவு

பழங்கள் சர்க்கரையின் அளவைக் கூட்டுகிறது என்றால், சர்க்கரை உள்ளவர்கள் பழங்களை உண்ணலாமா என்றால்? ஆம் உண்ணலாம். பழங்களில் சர்க்கரை உள்ளது என்றாலும் அதிகளவில் கிடையாது.

உதாரணத்திற்கு ஒரு இட்லியை எடுத்துக் கொண்டோமேயானால் அதில் 60-70 கலோரிகள் உள்ளது, ஒரு கப் காப்பி அல்லது தேநீரிலும் 60-70 கலோரிகள் உள்ளது. ஒரு கோப்பை பாலிலும் சராசரியாக 70 கலோரிகள் உள்ளது. ஆனால், நூறு கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதேபோல் 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகள் மட்டுமே உள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 100 கலோரிகள் உள்ளது. இவ்வாறு ஒப்பிடுகையில் பெரும்பாலான பழங்கள் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவை விட கலோரி கம்மியாகத்தானிருக்கும்.

நம் உடலானது கலோரிகளை மட்டும் தான் கணக்கிலெடுக்குமேயன்றி எதன் மூலம் அந்த கலோரி வருகிறது என்று கணக்கில் கொள்ளாது. உதாரணத்திற்கு, மாம்பழம் சர்க்கரை நோய்க்கு எதிரி என்று கூறுவார்கள். இது தவறான

தகவல் . 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது இது, 100 கிராம் அரிசி, 100 கிராம் சப்பாத்தி போன்ற உணவுகள் மூலம் பெறும் கலோரிகளை விட குறைவுதான். ஆனால், 100 கிராம் வாழைப்பழத்தில் 100 கிராம் கலோரிகள் உள்ளது.

அதற்காக சாப்பிடாமல் இருக்கலாமா என்றால், இல்லை சாப்பிடலாம் ஆனால் அளவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே எந்த ஒரு பழத்தையும் சுவையை வைத்து நாம் தரம் பிரிக்க தேவையில்லை. அனைத்து வகையான பழங்களையும் நாம் உட்கொள்ளலாம். ஏன் பழங்களை மட்டுமே நாம் ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம். காலை உணவாக ஒரு வாழைப்பழம், கொய்யாப்பழம் என நாம் உண்ணலாம் அல்லது இரண்டு மூன்று பழங்களை சேர்த்து நாம் இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பக்கம் பழங்களை உண்டால் சர்க்கரையின் அளவு கூடிவிடும் என சிலர் கருதுகிறார்கள். மறுபக்கம் சிலர் பழங்களை மட்டுமே உண்ணலாம் என கருதுகிறார்கள்.

பழங்களை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *