செய்திகள் வாழ்வியல்

சர்க்கரை, உப்பு குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் : இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அறிவிப்பு

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனை


சுவையூட்டியான சர்க்கரை நம்முடைய அன்றாட டயட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். டீ, காபி,ஜூஸ், கேக், இனிப்புகள் என எந்தவொரு உணவிலும் சுவையை அதிகப்படுத்த நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். இது நம் மனதிற்கு இதமான உணர்வை கொடுத்தாலும் இதை அளவாக உண்ணாவிட்டால் உடலுக்கு பலவிதங்களில் கேடு விளைவிக்கும்.

சமீபத்தில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் தேசிய ஊட்டச்சத்து மையமும் இணைந்து இந்தியர்களுக்கான புதிய டயட் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சமையல் எண்ணெய்களுக்குப் பதிலாக விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை, உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, குறைவான உடல் இயக்கம் ஆகியவை உடலில் மைக்ரோ ஊட்டச்சத்து குறைபாட்டையும் உடல் பருமனையும் அதிகரிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியர்கள் தினமும் 20 முதல் 25 கிராம் அளவிற்கு மட்டுமே சர்க்கரை சாப்பிட வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனாலேயே பலரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள் அல்லது அளவாக சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..

அதிகப்படியாக சர்க்கரை எடுத்துக்கொள்வதால் உடலில் குளுக்கோஸ்-6 பாஸ்பேட் அதிகரிக்கிறது. இதயத்தில் உள்ள தசை புரதங்களின் மாறுதல்களுக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. இது இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.

அதிகப்படியான குளுக்கோஸ் உட்கொள்வதால் செல்களும் மூளையும் சீக்கிரத்திலேயே வயதாவதாக 2009-ல் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

சர்க்கரை அதிகமாக உட்கொள்ளும் போது உடலில் எண்டோர்பின் வெளியாவதால், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

சர்க்கரை சாப்பிடுவதால் மலத்தில் பித்த அமிலம் அதிகரித்து பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய் வருவதற்கான கலவைகள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது.

அடிக்கடி வெள்ளை சர்க்கரை சாப்பிட்டு வந்தால் திசுக்கள் தொய்வடைந்து அதன் செயல்பாடுகள் குறையும்.

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் கருவின் தசை உற்பத்தியைப் பாதித்து, குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு உடற்பயிற்சி செய்யும் திறனை இழக்க வாய்ப்புள்ளது.

அடிக்கடி சர்க்கரை சாப்பிட்டு வருவது அல்பமின் மற்றும் லிபோபுரொட்டீன் என்ற இரண்டு ரத்த புரதங்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலை கையாள்வது சிரமமாக இருக்கும்.சுவையூட்டியான சர்க்கரை நம்முடைய அன்றாட டயட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். டீ, ஜூஸ், கேக், இனிப்புகள் என எந்தவொரு உணவிலும் சுவையை அதிகப்படுத்த நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். இது நம் மனதிற்கு இதமான உணர்வை கொடுத்தாலும் இதை அளவாக உண்டால் உடலுக்கு பலவிதங்களில் நன்மை விளைவிக்கும் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *