வாழ்வியல்

சர்க்கரையின் அளவைக் குறைக்கும் கற்றாழை

கற்றாழை தண்டுகளை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாகன் குறைந்திருப்பதாக நீரிழிவு நோய் குறித்து அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

நம் நாட்டில் நெடுங்காலமாகவே நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

புற்று நோய் நச்சுத்தன்மைகளை கற்றாழை எதிர்த்துப் போராடி அவற்றை அழிப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்து கொண்டோம்.

மனிதர்களுக்குப் பல காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும் மீண்டும் வளரக் கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெறச் செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாகப் பயன்படுத்துவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *