வாழ்வியல்

சரியான உணவுமுறை; உடற்பயிற்சி; உடல் நலன் காப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்

சரியான உணவுமுறை; சிறதளவு உடற்பயிற்சி; உடல் நலன் காப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

மன அழுத்தம் உங்களின் இரத்த அழுத்த அளவினைத் தற்காலிகமாக உயர்த்துகிறது. உங்கள் மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கு குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும். அதுவும் நீங்கள் உடல் பருமன் காரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளானவர் என்றால் மேற்கூறியது மிகவும் அவசியம்.

மன அழுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் கோபம், வெறுப்பு, எரிச்சல் மற்றும் எப்பொழுதும் தீராத சிந்தனையில் இருத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்ததிலிருந்து அமைதி பெற பல செயல்பாடுகள் உள்ளன.

சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகள்மூலம் இரத்த அழுத்தத்திற்குக் காரணமான மன அழுத்தத்தை எதிர்க்க முடியும்.

மனக் கவலையைத் தவிர்க்க மனதை ஒருநிலைப்படுத்தவும் தியானம், யோகா (தவம்) போன்றவற்றை மேற்கொள்ளலாம். காலையில் வழக்கமாக அமைதியான சூழலில் பத்து நிமிட தியானம் மிக அதிக அளவில் மன அழுத்தத்தினைக் குறைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *