சிறுகதை

சரிகம பதநி | ராஜா செல்லமுத்து

லதாவுக்கு உண்மையிலேயே நல்ல குரல் வளம் . அவள் இட்டுக்கட்டி இட்டுக்கட்டி பாடினால் அந்த தெருவில் உள்ளவர்கள் பார்ப்பார்கள். அதனால் அவள் இன்னும் திரைப்படங்களில் பாடுவதை விட இசையை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது மேல் என்று அவள் ஒரு பாட்டு வாத்தியாராகவ இருந்தாள்.

அவளுக்குள் இருக்கும் அந்த பாட்டு ஆசைகளை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் கழித்தார். அதனால் அதிக வருமானம் வரவில்லை என்றாலும் கூட அவள் மனதிற்கு போதிய நிம்மதி கிடைத்தது

ஆனால் அவரின் கணவர் கிருஷ்ணனோ இதற்கு எதிர்மாறானவர். எப்போது பார்த்தாலும் அதாவது அசிங்கமாக பேசுவது , அவளை கேவலமாக நடத்துவது என்று எப்போதும் லதாவை திட்டிக்கொண்டே இருப்பார்.

இப்பொழுதெல்லாம் பள்ளிகள் சரிவர திறக்கப்படாத காரணத்தால் பாடங்களை ஆன்லைன் முறையில் சொல்லித்தரும் முறை வந்துவிட்டது.

இந்த முறையை பயன்படுத்தி தனது செல்போனில் வீட்டிலிருந்தபடியே பாடல்களை சொல்லிக் கொண்டிருந்தார் லதா. அப்போது வீட்டுக்கு வந்த கிருஷ்ணன்

‘‘ என்ன சமைச்சே ? என்று அதிகார தொனியில் கேட்டார்.

சமைக்க நேரமில்ல. சாப்பாடு மட்டும் எடுத்து வச்சிருக்கேன். தயிரை ஏதாவது வாங்கி சாப்பிடுங்க என்று சொல்ல

சமைச்சா என்ன குறைஞ்சா போயிருவே? என்று திட்டினார்.

‘‘இல்லங்க பசங்களுக்கு சொல்லிக் கொடுக்க சரியா இருந்தது .அதான் சமைக்க முடியல .ஒரு நேரம் பொறுத்துக்கங்க .நாளைக்கு நான் சமைச்சு தர்றேன்

நீ இதையேதான் எப்பவும் சொல்றே. நல்லா சாப்டாத் தானே உடம்பு நல்லா இருக்கும். நீ எப்ப பாரு சாக்கு சொல்லிட்டு சரியா சமைக்கிறது இல்லை என்று வாய்க்கு வந்தபடி திட்டினார் கிருஷ்ணன்.

எதையும் பொருட்படுத்தாமல் பாடம் சொல்லிக் கொடுப்பதில் கவனமாக இருந்தார் லதா.

கிருஷ்ணன் சாப்பிட்டுக் கொண்டே லதாவை திட்டிக் கொண்டே இருந்தார்.

இது அக்கம் பக்கம் இருக்கும் வீட்டுக்காரர்களுக்கு கேட்டது

பாவம் அந்த அம்மா 10 பேருக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து அதுல குடும்பத்தை நடத்துறாங்க. ஆனா இந்த ஆளு எவ்வளவு கேவலமா பேசுறான். பாருங்கம்மா என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணன் லதாவை திட்டிக்கொண்டே இருந்தார்.

இருந்த ஒரு குழந்தையும் வெளியில் போய் படிக்க வீட்டில் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே என்பதால் லதா சமையல் விஷயத்தில் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை .

ஆனால் கிருஷ்ணனுக்கு இதுவே பெரிய விஷயமாகத் தெரிந்தது.

அதனால் தான் சாப்பிடும் ஒவ்வொரு நேரமும் லதாவைத் திட்டிக் கொண்டே இருப்பார்.

அன்றும் திட்டிக் கொண்டே இருந்தார். அக்கம்பக்க வீட்டுக்காரர்கள் அதற்கு ஆதரவாகப் பேசினார்கள்.

இது எதையும் பொருட்படுத்தாமல்

சரிகம பதநிச….. என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் லதா.

கிருஷ்ணன் திட்டிக் கொண்டே இருந்தார்.

ஆனால் அவளின் சங்கீத வாயிலிருந்து சத்தமாக அசிங்கமாக எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை.

மாறாக, அவள் வாயிலிருந்து கர்நாடக சங்கீதம் மட்டும் காற்றில் கரைந்து கொண்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *