சினிமா செய்திகள்

சம்பள பாக்கி: ‘மாஸ்டர் செப்’ குழுவினர் மீது நடிகை தமன்னா வழக்கு

சென்னை, அக். 25–

‘மாஸ்டர் செப்’ குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தமன்னா முடிவு செய்துள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செப்’. இந்நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தார்கள். திடீரென்று தெலுங்கில் தமன்னா நீக்கப்பட்டு அனுசுயா தொகுத்து வழங்கி வருகிறார்.

இது தமன்னாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமன்னா மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சம்பள பாக்கி உள்ளதாலும், தயாரிப்பு தரப்பின் ஒழுக்கமற்ற செயலினாலும் தமன்னா வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறார். தமன்னாவுடனான தொடர்புகளை உடனடியாக அவர்கள் துண்டித்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை முழுமையாக முடித்து கொடுக்க ஏற்கனவே முடிவான சில ஒப்பந்தங்களை தமன்னா ரத்து செய்தார். ஆனால் திடீரென்று அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் அவர்கள் மீது தமன்னா வழக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *