செய்திகள்

சமூக வலைதளம் – ராஜா செல்லமுத்து

புனிதவதி எப்போதும் வாட்ஸ்அப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைதளங்களில் இருப்பாள்.

அவளுக்கு எந்த வேலை இருந்தாலும் அவள் சமூக வலைதளப் பக்கங்களில் மூழ்கிக் கிடப்பார். அதை எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பான் சந்திரசேகர்.

அவள் சமூக வலைதளங்களில் இருப்பதைப் பார்க்கும் பாேது சந்திரசேகருக்கு சற்று எரிச்சலாக வரும்.

என்ன இது எப்ப பார்த்தாலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இப்படி தான் இருக்கு. இது தவறு என்று சொல்வான் நினைப்பான் சந்திரசேகர்.

ஆனால் அவள் எப்போதும் சமூகவலை தளங்களில் அவளைப் பின் தொடர்வது அவளைப் பார்ப்பது, அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்பது என்பதைக் கவனிப்பது என்று ஒவ்வொரு தடவையும் அவளை பின்தொடர்ந்து இருப்பான் சந்திரசேகர்.

இருவரும் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர்கள் சந்திரசேகரின் கவனம் முழுவதும் புனிதவதி சமூக வலைதளங்களில் இருப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் புனிதவதியைப் பார்த்து கேட்டே விட்டான்.

‘என்ன புனிதவதி எப்ப பார்த்தாலும் வாட்ஸ்அப் இன்ஸ்டால் ஃபேஸ்புக் எப்படி இருந்திருக்க? இது தவறு இல்லையா?’ என்று கேட்டபோது

‘இதுல என்ன தவறு இருக்கு? எனக்கு வேண்டியது எனக்கு தேவையானது சமூக வலைதளங்களை கிடைக்கிறது. அதை நாம் பயன்படுத்தும் இதுல தப்பு இல்லையே?’ என்றாள்.

‘இல்ல எப்ப பாத்தாலும் அதிலேயே இருக்கிற. அது தவறா தெரியுது’ என்று சந்திரசேகர் புனிதவதியிடம் கேள்வி கேட்டான்.

‘எது சரி? எது தவறு? என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் சரியாத்தான் செயல்படுறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ உன் வேலையைப் பார்க்கலாம்’ என்றாள் புனிதவதி.

‘இல்ல… நீ போற போக்கு சரியில்ல’ என்றான் சந்திரசேகர்.

‘யார் சொன்னது? உன் பார்வை தப்பா இருக்கு. நான் என்னுடைய வேலைகளைச் சரியாக பாக்குறேன். அதற்கான டைம் வரும்போது உனக்குத் தெரியும்’ என்றாள்.

‘எக்கேடு கெட்டுப் போ. எனக்கென்ன?’ என்று புனிதவதி உதறி விட்டுச் சென்றான் சந்திரசேகர்.

போட்டித் தேர்வுகளுக்கான தேதி வந்தது.

இருவரும் தேர்வு எழுதினார்கள். புனிதவதி தமிழகத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தாள். சந்திரசேகர் போல் தாேல்வியுற்றிருந்தான்.

‘எப்படி புனிதவதி எப்போ பார்த்தாலும் சமூக வலைதளங்களில் இருந்து நீ எப்படி? நான் எப்போதும் படிச்சிட்டு இருக்கேன். நான் பெயில். நீ பாசாயிட்ட? இது எப்படி?’ என்றான் சந்திரசேகர்.

‘சந்திரசேகர், நான் என்ன பண்றேன் அப்படிங்கறது பார்க்கிறதும் கவனிக்கிறதுன்னு பின்தொடர்ந்த உன்னோட வேலையா அது இருந்தது. ஆனா நான் சமூக வலைதளங்களில் வெட்டி அரட்டை அடிக்கிறது. பொழுது போக்குறது போஸ்ட் போடறது. இப்படி எல்லாமே நான் இல்ல. போட்டித் தேர்வுக்கான எல்லா கேள்வி பதில்கள் நான் படிச்சிட்டு இருந்தேன். என்னுடைய கவனம் முழுவதும் பரீட்சையில் ஜெயிக்கணும் அப்படிங்கறது மட்டும்தான் இருந்தது. ஆனா உனக்கு நான் என்ன பண்றேன்? என்ன செய்கிறேன்? அப்படின்னு என்ன பின்தொடர்ந்து பாத்ததுனால உனக்கு கவனம் முழுவதும் என்ன கவனிக்கல இருந்துச்சு. அதனாலதான் நீ பெயில் ஆயிட்ட. நான் பாசாயிட்டேன். சமூக வலைதளங்களில் இருந்தாலும் எனக்கு தேவையானது நான் எடுத்துக்கிறேன்னு சொன்னேன்ல. நீ நம்பல. நான் இப்ப ஜெயிச்சுட்டேன். நீ தோத்துட்ட. யாரையும் எப்பவும் தவறா நினைக்க கூடாது. அவங்க அவங்களுக்கான வேலையை அவர் செஞ்சுட்டு தான் இருப்பாங்க. அது தவறா இருந்தா சொல்லலாம். ஆனா எதுவும் தெரியாம சொல்லக் கூடாது. இனியாவது புரிஞ்சு நடந்துக்கோ. அடுத்த தேர்வுல கண்டிப்பா நீ பாசாகணும். என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று சொல்லிச் சென்றாள் புனிதவதி.

அவள் வார்த்தைகளைக் கேட்டு திகைத்து நின்றான் சந்திரசேகர்.

Leave a Reply

Your email address will not be published.