நெல்லை, ஜூலை 18–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவு செய்த பாஜக நிர்வாகி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதுாறாக பதிவு செய்த கீரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயக்குமாரை (வயது 32) திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் வழக்கு விசாரணைக்காக இன்று அதிகாலை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பி வந்த இவர், பாரதீய ஜனதா கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு கீரப்பாளையம் ஒன்றிய தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது