“உங்க பேர் என்ன?
“ஷர்மி “
“என்ன பண்றீங்க?”
“படிச்சிட்டு இருக்கேன் “
” ஓ…நீங்க என்ன பண்றிங்க
“நான் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கேன் “
“உங்கள பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?”
” ஏன்?”
“உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு “
” ஓ அப்படியா? சரி நம்பிட்டேன்”
“நீங்க நம்பித் தான் ஆகணும்.”
” உங்க கிட்ட நான் ஒன்னு கேட்கலாமா? “
” சொல்லுங்க “
“கேட்டா ஏதும் தப்பா நினைக்க மாட்டீங்களே ?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல”
” நீங்க தைரியமாச் சொல்லுங்க”
” எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க?”
” ஹலோ அது என் போட்டோ இல்ல. அது வேறவங்க போட்டோ .சும்மா ஐடிக்காக வச்சிருக்கேன் .நீங்க… உங்க போட்டோவை… வச்சிருக்கீங்களா?”
“இல்ல நானும் வேறவங்க…. போட்டோ தான் வச்சிருக்கேன்”
” எல்லாமே இங்க பொய்யா தான் இருக்காங்க”
“இல்ல அப்படி எல்லாம் சொல்ல முடியாது .ஒரு சிலர் பொய்யா இருப்பாங்க .உங்க லைப் பத்தி சொல்ல
முடியுமா?”
” என்ன லைப் அப்படியே போகுது “
“உங்களப் பத்தி நீங்க சொல்ல முடியுமா? “
“என்ன லைப் எனக்கும் அப்படியேதான் போகுது “
” கல்யாணம் பண்ணிட்டீங்களா?”
“பொண்ணு பாத்துட்டு இருக்காங்க”
“நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்களா ?”
“மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்க”
” நல்லா பேசுறீங்க “
“நீங்களும் நல்லா பேசுறீங்க”
” நாம ஒரு நாள் சந்திக்கலாமா?”
” கண்டிப்பா சொல்லுங்க மீட் பண்ணலாம் “
“எங்க மீட் பண்ணலாம்? “
” அதுவும் நீங்களே சொல்லுங்க “
“சரி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே?”
“மறுபடியுமா சொல்லுங்க. எப்படி சொல்றதுன்னு தெரியலையே?”
“எப்படிச் சொல்றது. நீங்களே யோசிங்க “
” யோசிச்சிட்டேன் .கண்டிப்பா உங்களிடம் சொல்லித்தான் ஆகணும்னு நினைக்கிறேன்”
” அப்படியா? “
” அப்படின்னா சொல்லுங்க. பட் பயமா இருக்கு “
” பயந்தா எப்படி சொல்றது? “
” உதட்டு வரைக்கும் வந்துருச்சு. சொல்லுங்களேன் . எப்படி சொல்றது ?
“எப்பவும் போல. எப்படி பேசுவீங்களோ? அப்படிச் சொல்லுங்க”
” உங்க பேச்சு உங்களுடைய பதில் இதெல்லாம் வித்தியாசமா இருக்கு “
” நீங்களும் வித்தியாசமா கேள்வி கேட்டீங்க. நானும் வித்தியாசமான பதில் சொன்னேன். அவ்வளவுதான்.
” இந்த பதில் கூட வித்தியாசமா இருக்கே “
“அப்படியா?”
“ஆமாங்க “
“இதுவரைக்கும் உங்கள மாதிரி ஒரு பெண்ணு கூட நான் சாட் பண்ணதே இல்ல”.
” நம்பிட்டேன் “
“நீங்க நம்பி தான் ஆகணும். வயசுக்கு மீறின காதல் பண்றீங்களா?
” யார் சொன்னா?’’
‘‘பாக்கிறவங்க சொல்லிக்கிட்டாங்க அது தப்பா என்ன?”
“தப்பு இல்ல. பண்ணலாம்” அன்புக்கும் ஆசைக்கும் வயசு எதுவும் இல்ல.எந்த வயசுலயும் யாருக்கு வேணாலும் காதல் வரலாம் “
“இப்போ உங்களுக்கு வந்து இருக்கு நல்லா பேசுறீங்க .
” நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன்”
” அப்படியா இத நீ வீட்டுக்காரர் கிட்ட தான் கேட்டுட்டு சொல்லணும்”
” என்னது உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?”
“ஆமா”
” அதை ஏன் முன்னாடியே சொல்லல “
“ஏன் முன்னாடி சொல்லலைன்னா… தாலி கட்ட வந்துடுவீங்களா?”
” இந்த ஆசைய நான் மறந்து இருப்பேனே ? “
“உங்கள என்னால மறக்க முடியாது. “
” அப்படியா? அப்படி ஒரு காதலா?”
” ஆமாங்க உங்க பேர் என்னன்னு நான் சொல்லட்டுமா “
“அதான் சொன்னேனே ?ராகினி “
” ஆமா மறந்துட்டேன் . நீங்க நல்ல பெண் “
” சரி வேற என்ன சொல்லுங்க? ராகினி . உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.
” ஓகே. உங்க பொண்டாட்டி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டீங்களா?”
” என்ன இப்படி சொல்றீங்க?. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல .
“டேய் லூசு. நான் தாண்டா உன் பொண்டாட்டி சகுந்தலா. நீ இப்படி ஊர் மேஞ்சிட்டு இருக்கிறதுனால உன்னை கண்டுபிடிக்க தான் ராகினின்னு ஒரு பேக் ஐடி உருவாக்கி உன்ன ஃபாலோ பண்ணேன். நீயும் வந்து வசமா மாட்டிக்கிட்ட. இந்த வயசுல உனக்கு காதல் தேவையாடா? கம்முனாட்டி . உன்னோட உண்மையான பேரு கிருஷ்ணமூர்த்தி .உன் பொண்டாட்டி என்னுடைய பெயர் சகுந்தலா .இந்த வயசுலயும் இப்படி சொல்லி விட்டு அலைகிற ? உனக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி புள்ள. .இருக்கிற பொண்டாட்டியை விட்டுட்டு எவளோ ஒருத்தி கூட கடல போட்டுட்டு திரியுற ? அதான் உன்னப் பொறி வச்சுப் புடிச்சேன் வசமா மாட்டிகிட்ட “
என்று மனைவி சகுந்தலா சொல்லச் சொல்ல வேர்த்துக் கொட்டியது. கிருஷ்ணமூர்த்திக்கு
” இப்படியெல்லாமா? இருப்பாங்க? நான் நம்பி ஏமாந்துட்டேன் “
என்று வீட்டை விட்டு ஓடினான் கிருஷ்ணமூர்த்தி. இப்போதெல்லாம் சமூக வலைதளம் பக்கமே முகத்தை வைப்பது இல்லை கிருஷ்ணமூர்த்தி