சிறுகதை

சமூக அக்கறை – ராஜா செல்லமுத்து

அது குளிரூட்டப்பட்ட உணவு விடுதி. அந்த உணவு விடுதியில் அத்தனை பேரும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முத்துக்கு மட்டும் தான் நுனி மூக்கில் கோபம் வந்தது.

என்ன இது? சாதத்திலும் உப்பில்ல; சாம்பார்லயும் உப்பில்ல. இதையெல்லாம் சகித்துக் கொண்டு சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களுக்கு, மத்தியில் சட்டென்று எழுந்து கேள்வி கேட்டான் முத்து .

யார் இங்க முதலாளி ?கொஞ்சம் அதட்டல் தாெனியில் கேட்டான். அவன் போட்ட சத்தத்திற்கு அந்த ஓட்டல் இருந்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்த்தார்கள். அங்கங்க நின்று கொண்டிருந்த சர்வர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள்

சார் என்ன சார் என்ன பிரச்சனை என்று கேட்டார்கள்

எங்க இந்த ஓட்டல் முதலாளி? என்று கேட்டான் முத்து

இல்ல சார் அவர் வெளிநாட்டில இருக்கிறார் . வருஷத்துக்கு ஒரு தடவை வருவார் என்று பதில் சொன்னான் அந்த உணவகத்தில் பணிபுரியும் ஒரு நபர்.

அதுதான் இவ்வளவு அசால்டா இருக்கீங்களா? முதலாளின்னு ஒன்னு இருந்தா வாடிக்கையாளர்களை எப்படி திருப்தி படுத்தனும்னு நெனப்பாரு. அதவிட ஒரு தடவை வர்றவங்க திரும்பவும் நம்ம ஓட்டலுக்கு வரணும்னு நினைச்சு அவங்களுக்கு சரியான உணவு கொடுப்பாரு.காரணம் வாடிக்கையாளர் தன்னை விட்டுப் போய்விடக்கூடாது. அதுதான் முதலாளிகளுக்கு உரித்தான குணம் . ஆனா உங்கள மாதிரி இருக்கிற ஆள் கிட்ட அத எதிர்பார்க்க முடியாது.

காலைல வந்ததும் டிபன் முடிச்சிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு, மதிய சாப்பாடு ரெடி ஆகணும் மதியம் அதயும் வித்திட்டு இரவு டிபனுக்கு ரெடி ஆகணும். இதுதான் உங்களுக்கு விதிக்கப்பட்ட வேல. அதுக்கு மேல நீங்க எதுவும் செய்ய முடியாது.

ஆனா முதலாளிங்கிறது அப்படி இல்ல. உங்க எல்லாரையும் கட்டி மேய்க்கிறவர். அதனால் தான் கேட்டேன் யார் உங்க முதலாளின்னு எல்லோரும் முத்து பேசுவதை பார்த்து திருதிருவென விழித்தார்கள் .

என்ன சார் உங்க பிரச்சனை சொல்லலாமே? என்று ஒரு சர்வர் சாென்னதும்

இதுக்கு முன்னாடி எவ்வளவு பேரு இங்க சாப்பிட்டாங்க என்று கேட்டான் முத்து

இருநூறு 300 பேருக்கு மேல சாப்பிட்டுருப்பாங்க சார்

ஆச்சரியத்தின் உச்சிக்குப் போன முத்து .ஆங்காங்கே இன்னும் சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

இவர்கள் நாக்கில் ருசி இருக்கிறதா இல்லையா? எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களா?

தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவதும் தப்பு இருந்தால் தட்டிக்கேக்கவும் செய்யணுமே

ஆனா இந்த மனிதர்கள் எதையும் சொல்ல மறுக்கிறார்களே? இது எப்படி என்று தனக்குள் பேசிக்கொண்ட முத்து

சாம்பார்ல உப்பு இல்ல. சாதத்திலயும் உப்பு இல்ல. உப்பு மறந்துட்டீங்க போல. இது தப்புசமச்சத சாப்பிட்டுட்டு தான் வாடிக்கையாளர்க்கு கொடுக்கறீங்களா ? இல்ல அப்படியே குடுக்குறீங்களா?

ஆடு மாடு மாதிரி தின்னுட்டு இருக்காங்க . இதுல என்ன நிறைகுறை இருக்குன்னு கண்டுபிடிச்சி சொன்னாத்தான் அடுத்து வார வாடிக்கையாளர்கள் நல்ல சாப்பிடுவாங்க .நல்ல பயன் அடைவாங்கன்னு ஏன் இந்த மனுசங்க நினைக்கல என்றும் பாெருமினான் முத்து.

சாப்பிட்டவங்க எல்லாம் எதுவும் பேசாம சாப்பிட்டு போறாங்க. நீங்க மட்டும் தான் இப்படி சொல்றீங்க?என்றான் ஒரு சர்வர்.

நான் அப்படி இல்லைங்க .எங்க தவறு நடந்தாலும் அதக் கேட்பேன். அது என் சுபாவம்.நீங்க கொடுத்தத சாப்பிட்டு பாருங்க .நான் சொன்னது உங்களுக்கு தெரியும். காசு பணத்த விட வாடிக்கையாளர்களுடைய சந்தோசம் தான் முக்கியம்

என்று ரொம்பவே தைரியமாக பேசினான் முத்து.

அதுவரையில் உப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இதெல்லாம் போய் எதுக்கு நாம கேட்கணும் ?நமக்கு எதுக்கு பிரச்சனை? என்று ஒதுங்கியவர்கள் எல்லாம் முத்து பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

இதுதான் சமூக அக்கறை ஒரு பிரச்சனை நடந்துச்சுன்னா அத தட்டிக் கேக்கிறதும் .அது பின்னாடி நடக்காம கட்டிக் காப்பாத்துறதும் நல்ல மனுசனுக்கு அழகு.

இத நீங்க சரியா செஞ்சீங்க

என்று அங்கிருந்தவர் முத்துவின் பெயரைக் கேட்டு கை காெடுத்தார்கள்.சாப்பிட்டதற்கான பில்லைக் கொடுத்துவிட்டு, அந்த ஓட்டலை விட்டுவெளியேறினான், முத்து.

சிறிது நேரத்திற்கு எல்லாம் சாப்பாட்டிலும் சாம்பாரிலும் உப்பு கலந்து வாடிக்கையாளர்களுக்கு பறிமாறப்டப்பட்டது .

சூப்பர் நல்லா இருக்கு. சாப்பாடு கச்சிதமான உணவு . கச்சிதமான குழம்பு .நல்ல கடைக்கு தான் கூட்டிட்டு வந்திருக்கீங்க

என்று குடும்பத்தாேடு வந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்

அதுவரையில் முத்து பேசியது தவறு என்று நினைத்துக் கொண்டிருந்த ஓட்டல் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் அவர் சொன்ன பிறகுதான், நம்ம தவறை நாம திருத்திக் கொண்டோம். வாடிக்கையாளர்கிட்ட நல்ல பெயர் வாங்கி இருக்காேம். இத தைரியமா சொன்ன முத்துவிற்கு நன்றி.

இதுதான் சமூக அக்கறை, சமூக சேவை என்று முத்துவை வாழ்த்தினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *