சிறுகதை

சமாதானம் … ராஜா செல்லமுத்து


சிறுகதை


நவீன் குடியிருந்த வீட்டிற்கு கீழே இருக்கும் வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதற்கும் கீழ் வீட்டில் இருப்பவர்கள் வயதானவர்கள் தான் . வயதான மனைவி, வயதான கணவன் என்று இருவர் மட்டுமே இருந்தார்கள். ஒரே ஒரு பெண் அவள் அவளும் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தாள்.

அதனால் அவர்களுக்கு அது ரொம்பவே சாதகமாக இருந்தது. சிறுபிள்ளை போல் திடீரென பேசிக்கொள்வார்கள்.

சிரித்துக் கொள்வார்கள்; சிறிது நேரத்திற்கெல்லாம் சண்டையிடுவார்கள். அவர்கள் எப்போது பேசுகிறார்கள். எப்போது சிரிக்கிறார்கள் இப்போது சண்டை போடுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத போது மேல் தளத்தில் இருக்கும் நவீனுக்கு எப்படித் தெரியும்?

ஒரு முறை கீழ் தளத்தில் இருந்த அந்தக் கிழவி நவீனிடம் கேட்டே விட்டாள்.

என்ன தம்பி நாங்க இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் ? அதைப்பற்றி ஒரு வார்த்தை கேட்க மாட்டியா ? என்று கேட்டாள் கிழவி

அதற்கு பதிலும் சொல்லாமல் சென்று விட்டான் நவீன்.

காலையில் சண்டை போட்ட அந்த வயதான தம்பதிகள் மாலையில் சிரித்து குதூகலமாக இருந்தனர்.

வாங்க சாப்பிடலாம் என்று கிழவி கூப்பிட

இந்தா வரேன் என்று கிளம்பினான் கிழவன்.

கொஞ்ச நேரத்திற்குள் கீழ் தளத்தில் இருந்து இருவரும் கை கொட்டி சிரிக்கும் சத்தம் கேட்டதும் நவீனுக்கு இது ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியது.

என்ன இது ? சண்டை போட்டாங்க இப்ப பேசிக்கிட்டு இருக்காங்க. இதுல வேற அந்தக் கிழவி சண்டை போடும் போது ஏன் இரண்டு பேருக்கும் சமாதானம் செய்யல அப்படின்னு கேக்குது .

நாம சமாதானம் பண்ணுனா மட்டும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து விடுவார்களா என்ன ? எப்பச் சண்டை போடுறாங்க எப்ப விளக்கங்கள் நமக்கு தெரியல. இவங்களுக்கு எதித்துக்கிட்டு சண்டை போட்டோம். அப்படின்னா நம்ம தான் வகையா நிக்கணும். இவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துருவாங்க.

அப்படியே நாம விலக்கி விட்டாலும் யாருக்கு சாதகமாக பேசி விளக்கிவிட முடியும் என்று தனக்குத்தானே குழம்பி கொண்டான் நவீன் .

இரண்டொரு நாட்கள் அமைதியாக இருந்த தம்பதிகள் மீண்டும் சண்டை போட்டார்கள்.

அப்பொழுதும் அந்தக் கிழவி சிறிது நேரத்திற்கெல்லாம் மேலே வந்து அவனைப் பார்த்து இப்படி சண்டை போடுறோம். நீ ஏன் சமாதானம் பண்ணிவைக்க மாட்டேங்குற ? என்று அன்றும் அதே பழைய பல்லவியை கேட்டாள்.

அதற்கு கோபம்கொண்ட நவீன் நீங்க சண்டை போடும்போது நான் யாருக்கு ஏத்திட்டு பேசுவது .அப்படியே நான் பேசினாலும் நீ கேப்பீங்களா? ஒருவேளை உங்களால் நியாயப்படுத்தி உங்க வீட்டுக்காரர திட்டுனா நீங்க நாளைக்கு இருந்து அவர் கூட பேசக்கூடாது .தனியா இருக்கனும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சுவார்த்தை இல்லாமல் ஒரே வீட்டில் இருக்கனும் . அது முடியுமா? முடியாது ? ஏன்னா நானும் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன் . நீங்க கொஞ்ச நேரம் சண்டை போடுறீங்க. சாயங்காலமா சேர்ந்து இருக்கீங்க. இடையில் நான் பூந்து சமாதானம் பண்ணி வச்சா நான் தான் குற்றவாளி ஆகனுமே தவிர நீங்க பேசி சிரிச்சு கிட்டு இருப்பீங்க .

அதனால இந்த சமாதானம் பண்ற வேலை எனக்கு வேண்டாம் சாமி. நீங்களே சண்டை போட்டுக்கங்க சேர்ந்துக்கங்க இல்லை எக்கேடு கெட்டுப் போங்க. நான் இதுல வரமாட்டேன் என்று சொன்னான் நவீன்.

என்னப்பா இப்படி சொல்லுகிறேன்னா நீங்க அப்படி என்றான் நவீன்.

அன்று காலை சண்டை வந்தது. மேலே வந்த கிழவி தம்பி கிழவன் சண்ட போடுறான். என்ன ஏதுன்னு கேக்க மாட்டயா? ஏன் இப்ப பாரு அசிங்கமா திட்டு இருக்கான் . வந்து என்னன்னு கேளு என்றபோது இல்ல நான் வரல நீங்களே பேசுங்க என்று சொன்னான் நவீன் .

கீழே போன கிழவியை கண்ட மேனிக்கு திட்டினான் கிழவன்.

அதை கண்டும் கேட்டும் பார்த்தும் கேட்டுக் கொண்டிருந்தான் நவீன்.

இவங்கள நம்பி நாம சமாதானம் பண்ண போக முடியாது. எப்படியோ போகட்டும் என்று வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.

மதிய நேரம் ஆரம்பித்த சண்டை சிறிது நேரத்திற்கெல்லாம் அடங்கியது .

மதியம் சிறிது ஓய்வு எடுத்து விட்டு வெளியில் வந்த நவீனன் காதில் கிழவன் கிழவி அரட்டை அடித்து பேசி சிரிக்கும் சத்தம் காதுகளில் வந்து நிறைந்தது .

அடடா பாத்தீங்களா ? என்ன சமாதானம் செய்யச் சொல்லி இருந்த கிழவி காலைல சண்டை போடுறாங்க. சாயங்காலம் சேர்ந்திருக்கிறாங்க, இவங்கள நம்பி எப்படி நம்ம சமாதானம் பண்றது. இவங்களுக்கு இரண்டு பேருக்கும் பைத்தியமா? என்ன என்று நொந்து கொண்டான் நவீன்.

அந்த இரவு முழுவதும் அந்த கிழவனும் கிழவியும் அடிக்கும் லூட்டி சிரிக்கும் சத்தம் என்று மேல் தளத்தில் இருந்த நவீனுக்கு ரொம்பவே தொந்தரவாக இருந்தது.

மறுநாள் காலை விடிந்தும் விடியாத அந்த கிழவியை திட்டிக் கொண்டிருந்தான்கிழவன் .

நவீன் இவ்வளவு சண்டை போட்டுகிட்டு இருக்கோம் ஏன் எங்களை வந்து சமாதானப்படுத்த மாட்டேங்கிற ?என்று கிழவி கேட்க அதை காதில் வாங்காதது போல வீட்டுக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டான் நவீன் .

கொஞ்ச நேரத்திற்கு சண்டை போட்ட அந்த தம்பதிகள் சற்று நேரத்திற்கெல்லாம் அடங்கினார்கள்.

அலுவலக வேலையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பினான் நவீன் . அதற்குள்ளாகவே இருவரும் சமாதானமாகி பேசிக்கொண்டிருக்கும் சத்தம் அவன் செவிகளில் வந்து சேர்ந்தது.

என்ன கொடுமடா இது. இவங்களை எந்த லிஸ்டில் சேர்க்கிறது? என்று சிரித்தபடியே அவன் குடியிருக்கும் மேல் தளத்திற்கு ஏறினான் நவீன்..

அப்போது அவர்கள் அந்தக் கிழவன் கிழவி பேசுவதும் சிரிப்பதும் ஆக இருந்த சத்தம் அவள் காதுகளில் வந்து நுழைந்தபோது,

மறுநாள் காலையில் கச்சேரி இருக்கிறது என்று அவனுக்குள்ளே நினைத்துக்கொண்டான் நவீன்.

கிழவன் கிழவி சிரிக்கும் சத்தம் நவீனின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.