செய்திகள்

‘சமாதானப் பிரபு சபை’ ஜேம்ஸ் சந்தோஷம் காலமானார்

சென்னை, மே 22

சமாதானப் பிரபு சபைகளின் தலைமைப் போதகரும், மூத்த தேவ ஊழியருமான பேராயர் டாக்டர் பி.ஏ.ஜேம்ஸ் சந்தோஷம் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை மைலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின், மந்தைவெளியில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 1971 -ம் ஆண்டு கிறிஸ்தவ சேவையில் அடியெடுத்து வைத்து சுமார் 49 ஆண்டுகள் இறைப்பணியையும், சமுதாயப் பணிகளையும் செய்தவர் பேராயர் டாக்டர் ஜேம்ஸ் சந்தோஷம். சுமார் 300-க்கும் அதிகமான திருச்ச பைகளை நிறுவியிருக்கிறார்.

இந்தியாவில் மாத்திரமல்ல உலகின் பல பகுதிகளிலும் கிறிஸ்தவ சேவையாற்றி இருக்கிறார்.

இவரது மனைவி கடந்த 2009 -ம் ஆண்டு மரணமடைந்தார். ஒரு மகனும் 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *