செய்திகள்

‘‘சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் குறைந்த கல்வி கட்டணத்துடன் புத்தகங்கள் இலவச வினியோகம்’’

சென்னை, செப்.14

‘‘சந்திரபிரபு அறக்கட்டளை நிர்வகிக்கும் மகத்தான கல்லூரியாக, சந்திரபிரபு ஜெயின் கலை விஞ்ஞான கல்லூரி சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். அப்படிப் பயன்படுத்தினால் சூரியனாக பிரகாசிக்கலாம்’’ என்று கல்லூரி பிரின்சிபல் என்.நாகஜோதி தெரிவித்தார்.

இந்தக் கல்லூரி 23 ஆண்டுக்கும் மேலாக சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்கும் பணியை சேவை நோக்கத்துடன் செயல்பட்டது. மிகச்சிறந்த ஆசிரியர்கள், சிறப்பான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் கல்வியையும் வழங்கிவருகிறது. கல்லூரியின் உட்புற கட்டமைப்பு வசதி, தரமான ஆய்வுக்கூடங்கள், நூலகம், கருத்தரங்க அவை மற்றும் விளையாட்டு திடல்களைக் கொண்டுள்ளது என்றார் நாகஜோதி.

மீஞ்சூரில் சிறந்த உயர் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் இக்கல்லூரியில் மிக குறைந்த கல்வி கட்டணம், பாடப்புத்தகங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இக்கல்லூரியின் மேலாண்மை மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதல் நிலை பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கமும், ரூ.10 ஆயிரமும் வழங்கிவருகிறது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளித்து அகில இந்திய விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற பெரும்பங்கு ஆற்றுகிறது. மேலும் மத்திய – மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகை தகுதியுள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

சிறந்த காற்றோட்டமான அறை, பசுமையான சூழல், சிறந்த உணவகம்கள், இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை அறிவியல், முதுகலை வணிகவியல் ஆகிய பாடங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தாளாளர் மற்றும் செயலர் லலித் குமுார் ஓ. ஜெயின் பேசுகையில், 1997ல் துவங்கப்பட்டு சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான கல்வித் துறையில் நிர்வாகம் தரமான கல்வியையும் தேவை அடிப்படையிலான கல்வியையும் அளித்து வருகிறோம். 23 ஆண்டுகளில் மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது. 100 ஊழியர்களையும், 1500 மாணவ மாணவிகளையும் கொண்டுள்ளது என்றார்.

2014–15 ஆண்டு முதல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பிஎஸ்சி படிப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண் எடுத்து உயர்ந்த இடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு அறிமுகப்படுத்திய இலவச கல்வி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. தடகளப் போட்டிகளில் மாணவ மாணவிகளை உடற்பயிற்சி கல்வித்துறை தயார்படுத்தி வருகிறது. தனித்தன்மை வாய்ந்த எங்களின் புத்தக வங்கி திட்டம் மூலம் மாணவ மாணவிகள் பயனடைகிறார்கள். சிறந்த கல்வி அறிவு ஊட்டுவதிலும் சமூகத்தில் பொறுப்பான பிரஜைகளாக மாணவ மாணவிகளை உருவாக்குவதிலும் இக்கல்லூரியின் இலக்காகும். எங்களது தொலைநோக்குப் பார்வை செயல் திட்டத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடிக்க கல்லூரியின் வழிமுறைகள் கட்டுப்பாடுகளை மாணவ மாணவிகள் அனைவரும் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் லலித் குமார் ஓ.ஜெயின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *