சென்னை, செப்.15-–
சந்திரயான்–-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து நிலவில் தரையிறங்கியது வரை காட்சிகள் அடங்கிய வீடியோவை உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-–3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வுப்பணியை தொடங்கியது.நிலவில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், சந்திரயான்-–3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து நிலவில் மென்மையான தரையிறக்கம் மற்றும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் காட்சி களின் தொகுப்புகள் அடங்கிய 16 வினாடிகள் கொண்ட வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நேரடி ஒளிபரப்பை கொண்ட வீடி யோவை உலகம் முழுவதும் 80 லட்சத்துக்கும் அதிக மான பேர் பார்த்து பரவசமடைந்து உள்ளனர். என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.