செய்திகள்

‘‘சந்திரயான்–3’’ விண்கலத்தை முதல் சுற்றுப்பாதையில் உயர்த்தும் பணி வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

புதுடெல்லி, ஜூலை 16–

சந்திரயான் 3 முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது – இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , ‘‘விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது’’ என்று பதிவிட்டுள்ளது.

தரையிறக்கம்

விண்ணில் பாய்ந்து உள்ள சந்திரயான்-3 விண்கலம் 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவை 40 நாட்களில் கடந்து ஆகஸ்டு 23-ந் தேதி மாலை 5.45 மணிக்கு நிலவின் தென்பகுதியில் சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *