செய்திகள்

சந்திரயான்–3 நிலவில் தரையிறங்கியதை 80 லட்சம் பேர் நேரலையில் பார்த்து சாதனை

சென்னை, ஆக. 24–

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை யூடியூப் நேரலையில் ஒரேநேரத்தில் 61 லட்சம் பேர் பார்த்து சாதனை செய்திருந்த நிலையில், சந்திரயான்–3 நிலவில் தரையிறங்கியதை 80 லட்சத்துக்கு மேலானோர் பார்த்து முறியடித்துள்ளனர்.

நிலவில் இந்தியா சார்பில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதன் 26 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ஒரு நிமிடத்திற்கு 2 அடி தூரம் சென்று, ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சந்திரயான்-3 தரையிறக்க நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பானது. நேற்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் சந்திரயான்-3ன் லேண்டர் தரையிறங்கியது. அதை முன்னிட்டு சுமார் 5.20 மணி அளவில் நேரலை ஒளிபரப்பை இஸ்ரோ தொடங்கியது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளம், இஸ்ரோ இணையதளம் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்வு ஒளிபரப்பானது.

முதலிடத்தில் சந்திரயான் நிகழ்வு

அதில் யூடியூப் தளத்தில் அதிக பார்வையை பெற்று, உலக சாதனையை படைத்துள்ளது. யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோ என்ற சாதனை நிகழ்ந்துள்ளது. இதில் யூடியூப் தளத்தில் மட்டும் நேரலை நிகழ்வை சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையை நிகழ் நேரத்தில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோவாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பான வீடியோக்களில் ‘கால்பந்து உலகக் கோப்பை 2022’ தொடரின் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 61 லட்சம் பார்வையை அதிகபட்சமாக பெற்றிருந்தது. அதே தொடரில் பிரேசில் பிரேசில் மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 52 லட்சம் பார்வையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *