நகரி, செப் 23
திருப்பதி லட்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது்:-
திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது நிர்வாக அதிகாரி அல்லது அறங்காவலர் குழு தலைவரின் பொறுப்பு. ஒரு முதல்-மந்திரியாக இருந்த போதிலும் கட்சி அலுவலகத்தில் வைத்து இதை பேசியது எந்தவிதத்தில் நியாயம். 2 மாதங்களுக்கு முன்பு சோதனை செய்த நெய்யில் வனஸ்பதி மட்டுமே கலந்திருந்ததாக கூறிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவை நிர்பந்தப்படுத்தி மீண்டும் அவரிடம் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பதாக நிருபர்கள் கூட்டத்தில் பொய் சொல்ல வைத்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் என்றாவது இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர்கள் வைத்தார்களா?. அரசியல் ஆதாயத்திற்காக அந்த ஏழுமலை யானை கூட விட்டு வைக்காத சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த ஏழு மலையானே தண்டனை கொடுப்பார். இவ்வாறு அவர் கூறினாா.