அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது மின்சார ரயில். கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும் இடையிலான தூரத்தை இரும்புக் கம்பிகள இணைத்திருந்தாலும் தொடர்வண்டி தான் தொலைவைக் குறைத்து மக்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது.
விதவிதமான மனிதர்கள். விதவிதமான பிரச்சனைகள் என்று அந்த ரயில் அத்தனை மனிதர்களையும் சுமந்து சென்று கொண்டிருந்தது.
கமலா, ஜாேதி இருவரும் அந்த ரயிலில் சந்தித்துக் கொண்டார்கள்.
கமலாவை பார்த்த சந்தோஷத்தில் ஜோதி ரொம்பவே மகிழ்ந்தான். இருவரும் நின்று கொண்டே இருந்தார்கள். எல்லோரும் பனி முடித்துப் போகும் நேரம் என்பதால் அந்த மின்சார ரயில் சற்று கொஞ்சம் கூடுதலாகவே கூட்டம் இருந்தது .
இரைச்சலான பேச்சுக்கள் எண்ணற்ற செல்போன்களில் இருந்து வரும் சத்தங்கள்.பேஸ்புக் டுவிட்டர் என்று அத்தனையிலும் மனிதர்கள் மூழ்கிக் கிடந்தார்கள்.
இது அத்தனையும் தாண்டி கமலாவும் ஜோதியும் தங்கள் பணிகளைப் பற்றியும் தங்கள் குடும்பங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார்கள்.
என்ன ஜோதி – வேலை எப்படி போகுது? என்றாள் கமலா.
போகுது போகுது என்னத்த போகுது. இந்த வாழ்க்கை இந்த வேலை .இந்த பிழைப்பு எனக்கு இது தேவை தான் என்று கமலா பேசினார்.
ஜோதி அவர்களுடைய இயலாமை, பார்க்கும் வேலை, குடும்பம், பிரச்சனை என்று பலவாறு பேசிக் கொண்டே வந்தார்கள்.
இருவர் பேசுவதிலும் சோகம் ஈரம் தொக்கி நின்றது. .இவர்கள் பேசுவதை அக்கம்பக்கத்தில் இருந்த சில பயணிகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் .
ஆனால் யாரும் செவிமடுக்கவில்லை .ஆனால் ஒருவர் மட்டும் இருவர் பேசுவதையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்தார்.
நிறுத்தங்களில ரயில் நின்றாலும் இருக்கையில் இருந்த பயணிகள் மட்டும் யாரும் இறங்கவில்லை. கூடுதலாக கூட்டம் கூடியதே ஒழிய அங்கு நின்று கொண்டிருப்பவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதில் கமலாவுக்கும் ஜோதிக்கும் கூட இடம் கிடைக்காமல் நின்று கொண்டே வந்தார்கள். இன்னும் ஐந்து நிறுத்தங்கள் செல்ல வேண்டும் என்று இருவருக்கும் கணக்கு புரிந்தது. சிறிது நேரம் அமரலாம் என்றால் யாரும் இருக்கையை விட்டு எழுவதாகத் தெரிவதில்லை.
அப்புறம் என்ன ஜோதி. நீதான் சொல்லு விஷயத்தை என்று கமலா கேட்க கால் தான் ரொம்ப வலிக்குது என்றாள்.
என்னமோ உனக்கு மட்டும் புதுசா கால் வலிக்கிற மாதிரி சொல்றே? எனக்கும் தான் வலிக்குது என்று சொன்னாள் ஜோதி .
இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த அந்தப் பயணி தன் இருக்கையில் இருந்து எழுந்து
நீங்க உக்காருங்க என்றார். அவர் சொன்னதைக் கேட்டு இருவரும் விழித்தார்கள்.
முன்பின் தெரியாத ஒரு நபர் நம்மை ஏன் உட்கார சொல்கிறார் என்று இருவருக்கும் சந்தேகம் இருந்தது.
இல்ல வேண்டாம் என்று ஒற்றைப்பதிலில் மறுத்தார்கள். தப்பில்லைங்க உட்காருங்க .நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிடுவேன் என்றார் அந்தப் பயணி.
வேறு வழியின்றி அவர்கள் இருவரும் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.. கொஞ்சம் தள்ளி இருந்த பயணி இடம் கொடுத்த பயணியிடம் மெல்லப் பேசினார்.
எதுக்காக சார் அவங்களுக்கு இடம் கொடுத்துட்டு நீங்க நிக்கிறீங்க? உங்களுக்கு என்ன நேர்த்திக்கடன். இதை உன்னிப்பாக கவனித்து அந்த பையனை தம்பி அவங்களை ஏன் உட்கார சொன்னேன் தெரியுமா ? என்றார்
அதற்கு தெரியாது என்பது போல தன இரு தோள்களையும் தூக்கினார் அந்த சக பயணி .
நான் காலையில ஒரு ஜவுளி கடைக்கு போயிருந்தேன் . அங்க இவங்கள பார்த்தேன. நான் யாருன்னு அவங்களுக்கு தெரியாது. .அவங்க யாருன்னு எனக்கு தெரியும்.
அதனால தான் இடம் கொடுத்தேன் என்றார் அந்தப் பயணி சரி.
எதுக்காக இடம் கொடுத்தீங்க என்று மறுபடியும் குரல் எழுப்பினான்.
அந்தப் பொண்ணுங்க ஜவுளிக்கடையில நின்னுட்டு தான் இருந்தாங்க. அப்பயும் அவங்க கால்கள் வலிக்குதுன்னு பேசிட்டு இருந்தாங்க. அதே பயணிகளை இப்ப நான் பார்க்கிறேன். இப்பயும் கால் வலிக்குதுன்னு தான் பேசிட்டுஇருந்தாங்க .
நிக்கிறதுக்காக அவங்க சம்பளம் வாங்குற தொழில் பார்க்கிறாங்க . இப்ப அவங்க நிக்கிறாங்க. இப்ப நான் பார்த்தது உண்மை. பகலெல்லாம் நின்னு கால் வலிச்சு போன இந்த பெண்களுக்கு நாம ஏன் இடம் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.
அதுதான் இடம் கொடுத்தேன். இது தப்பா என்றார் ஜோதி.
இதைச் சற்றும் கவனிக்காத அந்தப் பெரியவர் அவர் சொல்வதைக் கேட்டு அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் எல்லாம் வருத்தமும் ஆச்சரியம் கொண்டார்கள்.
கமலாவும் ஜோதியும் மற்றவர்களைப் பற்றி பேசுறது என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா? என்று இருவரும் கேட்டார்கள் .
ஒன்றும் இல்லைங்க ஒரு மனுஷன் ஒரு மணி நேரம் நிக்கலாம். இரண்டு மணி நேரம் நிக்கலாம்.
ஒரு நாள் பூரா நிக்கிறது எப்படி ? அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்குத்தான் அவங்க நிக்கிறாங்க என்றார் அந்தப் பயணி.
தங்கள் மீது இரக்கப்பட்டுத் தான் அவர்கள் இந்தச் செயலை கொஞ்ச நேரம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லாமலே இருவருக்கும் விளங்கியது.
இரண்டு ஒரு முறை சொல்லிப் பார்த்த கமலாவும் ஜோதியும் இவ்வளவு இடம் இருக்கு ஏன் அவங்க நிக்கிறாங்க . உட்காரச் சொல்லுங்க என்றாள் மறுபடியும் ஜோதி
அந்தப் பெட்டியில் இருந்த மொத்த பயணிகளும் நின்று கொண்டே பயணம் செய்தார்கள் :
இதற்கும் மொத்தக் காரணம் இடம் கொடுத்த பெரியவர் தான் என்று அந்தப் பெண்களுக்கும் தெரிந்தது.
இடம் கொடுத்த அந்த பெரியவரிடம் கமலாவும் ஜோதியும் கேட்டார்கள்
அந்தப் பயணி பதில் சொன்னார்
நாள் பூரா நின்னு கால் வலியாேட வர்ற உங்கள மாதிரி ஆளுகளுக்கு நல்லா இருக்கணும். மனுஷங்களால தொந்தரவு பிரச்சனை வரக்கூடாது..
நிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சுக்கறதுக்குத்தான் அவங்க நிக்கிறாங்க. நீங்க உக்காருங்க என்று அவர் சொன்னபோது
கமலா ஜோதிகாவின் கால் வலி பறந்து போயிருந்தது.
கண்களில் மட்டும் கண்ணீர் துளிர் விட்டது.