ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
ராய்ப்பூர், ஏப்.10–
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் நேற்று இரவு பஸ் ஒன்று சாலை அருகே இருந்த 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரங்கல்
முதல்வர் விஷ்ணு தியோ சாய் தனது இரங்கல் செய்தில், துர்க் மாவட்டத்தில் பஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
மாநில அரசின் மேற்பார்வையில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.