செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய காங்கிரஸ் அரசு

சத்தீஸ்கரில் மோடி குற்றச்சாட்டு

சூரஜ்பூர், நவ. 8–

சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வரும் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் சூரஜ்பூர் மாவட்டத்தில், பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக, நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:-

நக்சல் வன்முறை

நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் உற்சாகமடைகின்றனர். ஆங்காங்கே குண்டுவெடிப்புகள், கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் குற்றங்களும், கொள்ளையுமே ஆட்சி செய்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்தும் காங்கிரசை அகற்றுவது அவசியம். மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முக்கிய குற்றவாளியான சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு ரூ.500 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். சூதாட்ட ஹேக்கிங்கிற்கு இதை விட ஆதாரம் தேவையில்லை. மகாதேவ் பெயரில் ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பேசப்படுகிறது என பிரதமர் மோடி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *