செய்திகள்

சதுரகிரி செல்ல 6 ந்தேதி வரை விருதுநகர் கலெக்டர் தடை

விருதுநகர், செப். 4–

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக சதுரகிரியில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று முதல் 6 ந்தேதி வரை, பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதித்த கலெக்டர்

இருப்பினும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வர வேண்டாம் என்று கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 6 ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு இந்த நடைமுறையை கடந்த இரண்டு வாரங்களாக நடைமுறைப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *