செய்திகள்

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு; செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

புதுடெல்லி, அக்.30–

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் 5 மாதங்களாக சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதலில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தமக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறை மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து உடல் நலனை காரணம் காட்டி சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கேட்க முடியாது என சென்னை ஐகோர்ட் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்தது.

இதனால் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரியது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அதை ஏற்கவில்லை. பின்னர் நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை இன்று விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடைபெற உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *