சிறுகதை

சட்டபடி நடக்கணும் ! – எம் பாலகிருஷ்ணன்

Makkal Kural Official

செல்வம் கோபமாக வந்தான்

“டேய்… என்னடா கோபமா வர்ற?” என்று கேட்டான் ராமன்

“நம்ம பிரண்ட் பாபுவை ஒருத்தன் கோவில் திருவிழாவுல அடிச்சிட்டான்டா “! என்று நண்பன் செல்வம் சொன்னான் .

“யாருடா பாபுவை அடிச்சா ?அடிக்குற வரைக்கும் வேடிக்கையா பாத்தே? அவன் கையை உடைக்க வேண்டாமா?”

“சண்டையில பாபுவை அடிச்சிட்டு தப்பிட்டாங்க “!

“சரிடா என்ன நடந்தது? சொல்லுடா எப்படிச் சண்டை வந்தது சொல்லுடா?” என்றான் ராமன்.

“நானும் பாபுவும் இன்னைக்கு காலையில மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு போயிருந்தோம் “

“அப்ப ஒரே கூட்டமா இருந்தது. நானும் பாபுவும் பந்தல் ஓரமாக நின்னுகிட்டு இருந்தோம் “

“அப்ப ரெண்டு தடியன்கள் எங்க மேல மோதினாங்க. ’’

அதுக்கு நாங்க ‘‘பாத்து போக வேண்டியதுதானேனு கேட்டோம் “

“அதுக்கு அவங்க‘‘ நீங்க ஓரமா நிக்க வேண்டியது தானே அப்படினு எங்களை கேட்டாங்க…”

“எங்களுக்கு கோபம் வந்து ஏன் நீங்க பாத்து போக வேண்டியது தானே. நாங்களே ஓரமா தான் நிக்கிறோம்; தப்பு பண்ணிகிட்டு எங்களை குத்தம் சொல்லீறீங்களா ? “அப்படியின்னு நான்கேட்டேன் “

” உடனே அவன்கூட வந்தவன் என்னடா எங்களையே குத்தம் சொல்றீயா அப்பிடின்னு கேட்டுட்டே…”

“நம்ம பாபுவை தள்ளிவிட்டான். உடனே நான் எனக்கு கோபம் வந்து தள்ளி விட்டவனை நானும் தள்ள… “

“அவங்களுக்கும் எங்களுக்கும் கைகலப்பாகி அதுல அந்த தடிமாட்டு பைசங்க எங்கள அடிச்சுட்டாங்கடா!”

“பாபுவுக்கு மூக்குல ரத்தம் வந்திடிச்சி! என்னையும் முதுகில ஓங்கி அடிச்சிட்டு ஓடிட்டாங்கடா!

இதைக் கேட்ட ராமன்” ஏண்டா அவங்கள சும்மா விட்டீங்க? நீங்களும் நாலு சாத்து சாத்தலாமுல்ல !”

“அதுக்குள்ள திருவிழாவுக்கு வந்தவங்க எங்க சண்டையை சத்தம்போட்டு விலக்கி விட்டாங்க “என்றான் செல்வம்.

“இப்ப பாபு எங்கடா ?”

“அவன் ஆஸ்பத்திரிக்கு போயி இருக்கான்டா. நான் தான் உன்னை பாக்க வந்துட்டேன்” என்றேன்.

“அடிச்சவங்க யாருடா? அடையாளம் தெரியுமா?” எனக்கேட்டான் ராமன்.

“தெரியும்டா. அவங்க வீடு நாலு தெரு தள்ளித் தான் இருக்குடா .விசாரிச்சி பாத்தேன்; சொன்னாங்கடா”

“அப்படியா! சரி அவங்களை நாம் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவோமா ?”

“வேண்டாமுடா போலீஸ்காரங்க வர்றதுக்குள்ள அவங்க தப்பிச்சி ஓடி போயிடுவாங்க.

அதனால அவங்கள நாம திருப்பி அடிக்கனுண்டா !”

“சரி.! வா இப்பவே போயி அவங்களை ஒரு கை பாப்போம்”

“ஆமாம்டா அவங்கள சும்மா விடக்கூடாது. நம்ம யாருன்னு அவங்க தெரிஞ்சுக்கணும். வாடா !”

என்ற வாறே இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவிழாவில் தம்மை தாக்கி அடித்தவர்களை திருப்பி அடிப்பதற்கு வேகம் கொண்டு கோபங்கள் தெறிக்கப் புறப்பட்டனர்!

அவர்கள் நாலு தெரு அருகில் வந்து விட்டனர். ஆத்திரத்துடன் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு,

திருவிழாவில் தாக்கிய அந்த இருவரின் வீட்டு அருகில் நெஞ்சை நிமிர்த்தி ஆவேசமாக நடந்து செல்லும் போது அங்கே அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!

ஆம்.

திருவிழாவில் சண்டை போட்டவர்களின் வீட்டு வாசலில் இரு போலீசார் நின்றுகொண்டிருந்ததையும் பக்கத்தில் பாபு நின்றுகொண்டிருந்ததையும் பார்த்தவுடன் சிலையாக நின்றனர்!

அப்படியே தங்கள் கோப ஆவேசத்தை குறைத்து ஒன்றும் தெரியாததைப் போல் இருவரும் மெதுவாக அவர்கள் அருகில் சென்று நின்றனர் !

அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது! பாபு போலீசாரிடம் புகார் கூறி அவர்களை அழைத்து வந்திருப்பதை!

அங்கே ஒரே பரபரப்பாக பாபு போலீசாரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“சார் இந்த பசங்க நானும் என்னோட பிரண்டும் செல்வமும் கோவில் திருவிழாவுக்கு போயிருந்தப்போ”

“இவங்க ரெண்டுபேரும் எங்க மேல மோதிச் சண்டை இழுத்தாங்க சார் “

“ஏன் எங்க மேல மோதிறீங்க?ன்னு கேட்டதுக்கு எங்களை தள்ளிவிட்டு அடிச்சி மூக்கை உடைச்சிட்டாங்க சார்! நான் இப்பத்தான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வர்றேன்’’, என்று சொல்லிக் கொண்டு திரும்பி பார்த்த பாபு,

“இதோ என்னோட பிரண்ட் செல்வமும் வந்திருக்கான் சார். அவன் கிட்டேயே கேளுங்க சார் !

அருகில் வந்த செல்வத்தை கைகாட்டினான் பாபு. செல்வமும் அவர்கள் பக்கத்தில் வந்து” சார் பாபு சொல்லுறது உண்மைதான் !

இந்த ரெண்டு பசங்க எங்களை அடிச்சிட்டாங்க சார் “என்று அவனும் தனது புகாரை போலீசாரிடம் கூறினான்.

போலீசார் பாபு செல்வத்தின் புகார்களை கேட்டு சண்டை இழுத்த அந்த இரு தடியர்களை சட்டைகாலரை பிடித்துபடி “ஏண்டா கோவில் திருவிழாவில் சண்டையா போடுறீங்க? நீங்க பெரியரௌடியா? வாங்கடா ஸ்டேசனுக்கு !” என்று கூறிக்கொண்டு அவர்களை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றனர்!

அப்போது போலீசார் பாபுவையும் செல்வத்தையும் பாத்து,” ஏம்பா நீங்க ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு போங்க” என்றனர்.

அதற்கு பாபுவும் செல்வமும்,”சரிங்க சார்! நாங்க ஸ்டேசனுக்கு வர்றோம் என்று அவர்களின் பின்னால் நடந்துசென்றனர். அப்போது செல்வம் பாபுவிடம், “டேய் பாபு நல்ல‌வேளைடா. நாங்க கொஞ்ச‌நேரத்துல தப்பு பண்ணப் பாத்தோம் “!

“என்னடா சொல்றே? “நம்மல அடிச்ச ரெண்டு பேரையும் நானும் ராமனும் சேர்ந்து அவங்களை அடிக்க முடிவுசெஞ்சி கொலைவெறியில் வந்தோமுடா “

ஆனா, நீ அதுக்குள்ள போலீசை கூட்டிட்டு வந்துட்டே அதுவும் ஒரு வகையில் நல்லதா போச்சிடா!

இல்லையின்னா நாங்க வந்த கோபத்துல நம்மல அடிச்சவங்களை நாங்க எதாவது செஞ்சுட்டா அப்போ எல்லாரும் ஜெயிலுக்குள்ள தான் இருப்போம்! என்று கூறியதைக் கேட்ட பாபு,

“டேய்… செல்வம் எதையும் சட்டபடி தான் செய்யனும்; நம்ம இஷ்டத்துக்கு இவங்களை கைவச்சோமுன்னா அப்புறம் நாமும் குற்றவாளியா ஜெயிலுக்கு உள்ள இருப்போம்! நம்ம பக்கம் ஞாயம் இருக்குறப்ப .அதுனால சட்டத்தை நம்ம கையில எடுக்கக்கூடாது ! சட்டபடி மதிக்கணும் ! சட்டபடி நடக்கணும்

“நான் ஆஸ்பத்திரிக்குபோயிட்டு அப்படியே போலீஸ் ஸ்டேசனுக்கு போயி இவனுக மேல ரிப்போர்ட்டை கொடுத்தேன். உடனே போலீஸ்காரங்க எனக்காக வந்துட்டாங்க !

“எதையும் முறையா சரியா போனதுனால நாம தப்பிச்சோம். நீ சோன்ன மாதிரி அவசரப்பட்டு அடிச்சவங்கல நாமும் போயிச் சண்டை இழுத்தோமுன்னா ” அது இதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையாக ஆகிவிடும்! அதனால்தான் உடனே போலீஸ் ஸ்டேசனுக்குபோய் நடந்த விசயத்தை அவங்ககிட்ட சொன்னேன்.

இனிமே அந்த தடிப்பசங்களும் நம்மகிட்ட வாலாட்ட மாட்டாங்க. பிரச்சினை வரும் போது நாம நிதானமாக முடிவெடுக்கணும்; சட்டத்தையும் மதிக்கணும் “

அப்பத்தான் வன்முறையிலிருந்து நாம தப்பலாம். எல்லாரும் இதை மனசுல வைக்கணும் என்றான் பாபு.

இதைக் கேட்டதும் செல்வம், “நீ சொல்றதும் சரிதான்டா ! எனக்கு இப்பத்தான் புரியுது! என்றான். இருவரும் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றனர்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *