செய்திகள்

சட்டத்தின் வழியே மக்களை சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர் : அம்பேத்கருக்கு ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, டிச.6–

இன்று அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

‘‘இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப்பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்!

உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர். அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்.

எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கிச் சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்’’.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *