செய்திகள்

சட்டசபை தேர்தல்: தமிழகத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

சென்னை, மார்ச்.25-

சட்டசபை மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்லையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபை மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக நடைபெறும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஏப்ரல் 4ந்தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 6ந்தேதியன்று இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2ந்தேதியன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை என 4 நாட்கள் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.

இதேபோல உரிமம் பெற்ற பார்களும் அன்றைய தினம் மூடப்படும். சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கி வைத்திருந்தாலோ, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சென்றாலோ உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி., சிறப்பு டி.ஜி.பி. (அமலாக்கம்), கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்–ஒழுங்கு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர், மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *