சிறுகதை

சகுனம் – ராஜா செல்லமுத்து

பாண்டிக்கு எப்போது பார்த்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயங்கள், ஏவல், பில்லி சூனியம், எதிர்பார்த்து ஒரு ஆளைப் பார்த்தால் அவர்கள் மூலம் நல்லது நடக்கும் : இன்னொரு ஆளைப் பார்த்தால் தீங்கு நடக்கும். வீட்டை விட்டு வெளியே போனால் பூனை குறுக்கே வரக்கூடாது. வெறும் குடத்தோடு வரக்கூடாது. அவர்கள் – இவர்கள் தென்படக்கூடாது என்று சகுனக் கோட்பாடுகளை வைத்திருப்பான்.

அவன் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தான் வீட்டை விட்டு வெளியே கிளம்புவான்.

யாராவது அபசகுனமான ஆட்கள் தென்பட்டால்” ஐயோ இன்னைக்கு போன காரியம் விளங்காது” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விடுவான் அல்லது அவர்கள் போன பிறகு ஐந்து நிமிடமாே பத்து நிமிடமாே இருந்து விட்டு தான் போவான்.

அவர்களைச் சகுனம் சரியில்லாதவர்கள்; இவர்களைப் பார்த்து விட்டு போய் அந்த காரியம் நடக்கவில்லை என்றால் சாகும் வரைக்கும் அவர்கள் ஏதாவது ஒரு காரியத்திற்கு போகும் போது அவர்களைப் பார்த்து விட்டுப் போகக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பான் பாண்டி.

இதைப் பற்றி தன் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வான்.

நல்லது , கெட்டது ,நல்ல நேரம், கெட்ட நேரம், எமகண்டம், குளிகை என்று வாய் காலண்டர் போல அத்தனையும் வாய்ப்பாடாக வாசிப்பான் பாண்டி.

அவன் சிந்தனையை ஒட்டிய ஆட்கள் அவனுக்கு ஆமா என்று சொல்லுவார்கள். அவன் சொல்லும் சிந்தனையை சரி என்று ஏற்றுக் கொள்ளாதவர்கள். பகுத்தறிவு மிக்க சில மனிதர்கள் அப்படி எல்லாம் இல்லை என்று பாண்டியுடன் வாதம் செய்தால் அவர்களை அறவே ஒதுக்கி விடுவான் பாண்டி .

இவர்களுக்கெல்லாம் என்ன தெரியும் 2 இந்த பூமி சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள், சகுனங்களால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களைச் சந்திப்பதை அவர்களுடன் விவாதிப்பதை விட்டு விடுவான் .

தன்னுடைய பேச்சுக்கு ஒத்து வரும் ஆட்களோடு மட்டும் இந்த மாதிரி விஷயங்களைப் பேசுவான்.

வழக்கம் போலவே பாண்டி அன்று வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் எப்போது வீட்டை விட்டு வெளியில் கிளம்பினாலும் அவன் எதிர் வீட்டில் இருக்கும் கிழவியைப் பார்த்துவிட்டு போனால் ஏதாவது ஒரு அபசகுனம் நடக்கும் அல்லது பாேகிற காரியம் உருப்படாது என்று அவன் மனதுக்குள் நினைத்துக் கொள்வான்.

அதன்படியே அன்று அந்தக் கிழவியை வீட்டில் பார்க்காமல் கிளம்பினான். கிழவி வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து சந்தாேஷத்தாேடு பாேனான். ஆனால் எதிர்வரும் தெருவில் அந்தக் கிழவியை சந்தித்தான்

ஐயோ இந்த ஆளைச் சந்தித்து விட்டோமே? என்ன நடக்கப் போகிறதோ? என்று அலுத்துக் கொண்டேன். போன காரியம் அன்று சரியாக முடியவில்லை என்று அவனுக்குப் பட்டது . அவனுக்கு போகும் போதே இந்தக் காரியம் சரியாக வராது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே போனான்.

ஏனென்றால் இதேபோன்ற ஆளைப் பார்த்து விட்டேன். அந்தக் காரியம் சரியாக வராது என்று அவன் புத்தி சொன்னது . அது போலவே அந்தக் காரியம் நடக்காமல் போனது என்று தன் நண்பன் முருகனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாண்டி

அதை ஆமா என்றான் முருகன்.

நீ சொல்றது உண்மைதான் பாண்டி எங்க வீட்டுக்கு பக்கத்துலயும் ஒரு ஆள் இருக்கு. அந்த ஆளை பார்த்துட்டு போனா எந்தக் காரியமும் நடக்காது ; எனக்கும் அப்படித்தான் என்று முருகனும் பாண்டியுடன் சேர்ந்து இருவரும் சகுனங்களில் பலன்களைப் பற்றி விவாதித்து பேசிக் பேசிக் கொண்டிந்தார்கள் .

அவர்களுடைய பார்வையில் இவர்களைப் பார்த்தால் நல்லது நடக்கும். இவர்களை பார்த்தால் கெட்டது நடக்கும் என்று விலாவாரியாக விரித்துக் கொண்டிருந்தார்கள்.

எதிர் திசையில் காலையில் பாண்டியைப் பார்த்துப் போன ஆள் கீழே விழுந்து விட்டார். கையில் காலில் பலத்த அடி. நடமாடிக் கொண்டிருந்த ஆள் இப்பாேது படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

மகன் ,மகள், உற்றார் ,உறவினர்கள் அவரைப் பார்த்து சென்றார்கள் .

அப்போது அவர் அழுது கொண்டே புலம்பினார். நான் பேசாம நல்லாதான் நடந்துட்டு போயிட்டு இருந்தேன் .அந்த வீணா போன பாண்டி குறுக்க வந்தான். என் முகத்தைப் பார்த்துட்டு பாேனான். அப்பவே நினைச்சேன். இந்த வீணாப் போனவன் முகத்தை பார்க்கிறோமே இன்னைக்கு என்ன நடக்க போகுதாேன்னு . அது மாதிரியே கீழே விழுந்துட்டேன். கொஞ்சம் கூட ராசி இல்லாதவன் அந்த பாண்டி . அவன பாத்ததினால தான் எனக்கு இந்த பிரச்சின. இனி சாகுற வரைக்கும் அவன் முகத்தநான் பாக்கக் கூடாது என்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டார்.

பாண்டி அவரைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தான். கிழவி பாண்டியைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.

முருகன் கிழவியின் நிலைமை தெரியாமல் பாண்டியின் பக்கமே பேசிக் கொண்டிருந்தான்.

நல்லது, கெட்டது, நேரம், காலம் எல்லாம் நமக்குத் தெரியாது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நல்லது என்பதும் கெட்டது என்பதும் அவரவர் மனதை பொறுத்ததே தவிர ஒருவரை பார்ப்பதால் ஒருவரை எதிர்கொள்வதால் எந்தப் பிரச்சினையும் வராது என்பது இவர்கள் மாதிரி ஆட்களுக்கு எப்போது விளங்கப் போகிறதாே?

அதுவரையில் சகுனங்களும் சாத்திரங்களும் நல்ல நேரமும் கெட்ட நேரமும் எமகண்டமும் குளிகையும் இங்கு இருந்து கொண்டே தான் இருக்கும் என்று இரண்டு பேரைப் பற்றியும் தெரிந்து கொண்ட ஒருவர் பேசிக் கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *