செய்திகள்

கோ-வின் போர்ட்டல் மூலம் 2 நாளில் 2.28 கோடி பேர் முன்பதிவு

டெல்லி, ஏப். 30–

மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக, இதுவரை 2 கோடியே 28 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 3ம் கட்ட தடுப்பூசி போடும் பணி மே ஒன்றாம் தேதி தொடங்கப்பட உள்ளது.

2.28 கோடி பேர் முன்பதிவு

மே 1ஆம் தேதி முதல் 18 முதல் 45 வயதான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் போர்ட்டல் செயலியில் நேற்று முன்தினம் 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 3 ஆம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, கோ-வின் போர்ட்டல் செயலியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட 2 கோடியே 28 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *