செய்திகள்

கோவை விமான நிலையத்தில் ரூ 1.4 லட்சம் கடத்தல் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

Makkal Kural Official

கோவை, அக். 8–

அபுதாபியில் இருந்து கோவை வந்த விமான பயணி ஒருவரிடம் இருந்து ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்களை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அபுதாபி – கோவை இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில் அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பயணி ஒருவரின் உடமையை ஆய்வு செய்த போது அதில் ‘எஸ்சி’ என்ற வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் முன்புறம் வேறு உணவு பொருள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மொத்தம் ரூ 1.4 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரம் சிகரெட்கள் இருந்தன அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *