செய்திகள்

கோவை ராம்கோ சிமெண்ட் பயிற்சி மையம் தேசிய அளவில் 3வது விருதுக்கு தேர்வு

சென்னை மார்ச் 12

அரியலூரில் ராம்கோ சிமெண்ட் நிறுவியுள்ள பி.ஏ.சி. ராமசாமி ராஜா தனியார் தொழில் பயிற்சி மையம், நாட்டிலுள்ள பயிற்சி மையங்களில் மிகச்சிறந்த 3வது மையமாக தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டது என்று ராம்கோ குரூப் தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி ஏ.வி. தர்ம கிருஷ்ணன் தெரிவித்தார்.

2010ம் ஆண்டில் ராம்கோ சிமெண்ட்ஸ் மிகவும் பின்தங்கிய பகுதியான அரியலூரில் இந்த ‘ஐடிஐ’ நிறுவியது. கிராமப்புற மாணவ – மாணவிகளுக்கு தொழில் பயிற்சி அளித்தது. ராம்கோ இந்தப் பகுதியில் ‘சிபிஎஸ்இ’ பள்ளி நடத்துகிறது. சிமெண்ட் ஆலையில் நேரடி பயிற்சி அளிக்கிறது.

இது தொழிற்சாலை பாதுகாப்பு, எளிய முறையில் தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கிறது.

பி.ஏ.சி. ராமசாமி ராஜா தனியார் தொழில் பயிற்சி இன்ஸ்டியூட்டில் சராசரியாக மாணவர் 90 % மார்க் எடுக்கின்றனர். 80 % மாணவர்கள் பெறுகின்றனர். இதற்கு உலகத்தர ஐஎஸ்ஓ தர சான்று கிடைத்துள்ளது.

தலைமை எக்ஸிக்யூட்டிவ் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன் பேசுகையில், மத்திய அரசு ராம்கோ சிமெண்ட் சமூகப் பொறுப்பும் நடவடிக்கையாக ஏழை மாணவ, -மாணவிகளுக்கு கல்வி தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு பயிற்சியை வழங்குவதை பாராட்டி தேசிய அளவில் 3வது இடத்தில் தேர்வு செய்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *