செய்திகள்

கோவை, நீலகிரியில் மிக கனமழை எச்சரிக்கை

சென்னை, ஆக.9

கோவை, நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரியில் ஒரிர இடங்களில் இடியடன் கூடிய மிககனமழைக்கு வாயப்பு உள்ளது.

வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் மிதமான மழை பெய்யலாம்.

கடந்த 24 மணி நேரத்தில், பாம்பனில் 12 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 செ.மீ., சின்னக்கல்லாறில் 9 செ.மீ., மதுராந்தகம், செய்யாறு, ஆடுதுறை, செந்துறை, சேந்தமங்கலத்தில் தலா 7 செ.மீ., புதுக்கோட்டை, திருவிடைமருதூர், வால்பாறை, சென்னை தரமணியில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *