செய்திகள்

கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது

கோவை, டிச. 11–

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜய், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவம்பர் 27-ம் தேதி இரவு தங்கம், வைரம் உள்பட 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்தும், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த நிலையில், கொள்ளையன் தருமபுரி, அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிய வந்தது. கொள்ளையடித்த நகைகள் வீட்டில் தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டுத் தலைமறைவாகி இருந்து வந்தான்.

மடக்கிப் பிடித்த போலீஸ்

இந்த நிலையில், மாலை அணிந்து பக்தர் போல் வேடமிட்டுச் சுற்றித் திரிந்த விஜயை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட விஜய் தனிப்படை போலீசாரால் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் விஜய்க்கு மூளையாக செயல்பட்டது யார் என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *